ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம்


ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 3 Nov 2019 4:00 AM IST (Updated: 3 Nov 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி தேளூர் பிரிவு பாதையில் கயர்லாபாத் போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி தேளூர் பிரிவு பாதையில் கயர்லாபாத் போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் முன்னிலை வகித்தார். முகாமில் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும். ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்லக்கூடாது. குடித்து வாகனம் ஓட்டக் கூடாது. செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.


Next Story