மாணிக்கம்பாளையம், நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு


மாணிக்கம்பாளையம், நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Nov 2019 11:00 PM GMT (Updated: 2 Nov 2019 8:22 PM GMT)

மாணிக்கம்பாளையம், நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் மெகராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் மெகராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு காய்ச்சல் நோயாளிகளுக்காக தனியாக சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு உள்ளதையும், அங்கு நோயாளிகளுக்கு வழங்குவதற்காக நிலவேம்பு கசாயம் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் ஆகியவை வைக்கப்பட்டு உள்ளதையும் பார்வையிட்டார். மருத்துவமனையில் பிரசவித்த தாய்மார்களுக்கு அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தினை கலெக்டர் வழங்கினார். மேலும் நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின்போது மாணிக்கம்பாளையம் மற்றும் நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆய்வக பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மாணவியர் விடுதி

முன்னதாக வேலகவுண்டம்பட்டி அரசினர் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதியினை கலெக்டர் நேரில் பார்வையிட்டு, அங்கு மாணவிகளுக்கு உணவு சரியாக வழங்கப்படுகின்றதா? எனவும், பாய், போர்வை போன்றவை வழங்கப்பட்டு உள்ளனவா? என்றும் கேட்டறிந்தார்.

மேலும் கழிப்பிடங்கள், குளியலறை ஆகியவை சுத்தமாக உள்ளனவா? என்றும் சமை யலறையில் சுகாதாரமான முறையில் உணவு சமைக்கப்படுகின்றதா ? என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Next Story