திண்டிவனத்தில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது


திண்டிவனத்தில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 3 Nov 2019 4:30 AM IST (Updated: 3 Nov 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.

திண்டிவனம்,

ஏடிஸ் வகை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. பயன்படாத டயர், தேங்காய் சிரட்டை, உடைந்த குடங்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள், சிமெண்டு தொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் தேங்கி நிற்கும் நீரில் ஏடிஸ் கொசு உருவாகிறது.

181 பேருக்கு டெங்கு

இதனை கண்டறிந்து சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் அனைத்து துறை ஊழியர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தடுக்க முடியும். கடந்தாண்டு விழுப்புரம் மாவட்டத்தில் 312 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இந்தாண்டு 181 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதனை தொடர்ந்து டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க, அங்கிருந்த அனைவரும் ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தில், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, திட்ட அலுவலர் மகேந்திரன், விழுப்புரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி, கள்ளக்குறிச்சி சுகாதார துணை இயக்குனர் ஜெமினி, திண்டிவனம் அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் சாந்தகுமாரி, நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ், தாசில்தார் ரகோத்தமன், ஒலக்கூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story