மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் சாலையில், ரெயில்வே கேட் அமைக்க எம்.பி.யிடம் பொதுமக்கள் கோரிக்கை + "||" + On the Sathankulam road, MP to set up Railway Gate Public demand

சாத்தான்குளம் சாலையில், ரெயில்வே கேட் அமைக்க எம்.பி.யிடம் பொதுமக்கள் கோரிக்கை

சாத்தான்குளம் சாலையில், ரெயில்வே கேட் அமைக்க எம்.பி.யிடம் பொதுமக்கள் கோரிக்கை
சாத்தான்குளம் செல்லும் சாலையில் ரெயில்வே கேட் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் நவாஸ்கனி எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பனைக்குளம், 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் குயவன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சாத்தான்குளம்-முனியன்வலசை உள்ளது. இந்த கிராமத்திற்கு ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து செல்லும் பிரிவு சாலையில் செல்ல வேண்டும். முனியன்வலசை பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கார், மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல முடியும். மழைக்காலத்தில் இந்த பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், போக்குவரத்து வசதி இல்லாமல் இப்பகுதி மக்கள் மாற்று வழியில் நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதையடுத்து இங்கு ரெயில்வே கேட் அமைக்க தொடர்ந்து பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தநிலையில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனியிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் சாத்தான்குளம்-முனியன்வலசை பகுதியில் அமைந்துள்ள ரெயில்வே சுரங்கப்பாதையை நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது முனியன்வலசை கிராம மக்கள் சார்பில் எம்.பி.யிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:- முனியன்வலசை பகுதியில் சுமார் 140 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ரெயில்வே கேட் அமைக்கப்படாமல், சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளதால் எங்கள் ஊரில் இறந்தவர்களின் சடலத்தை கூட இந்த வழியாக மயானத்திற்கு எடுத்துச்செல்ல முடியவில்லை. மேலும் மழைக்காலங்களில் இந்த பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டு அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி இங்கு ரெயில்வே கேட் அமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட நவாஸ்கனி எம்.பி. கூறும்போது, பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வேன். தற்போது இந்த சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் ஆட்டோ, கார், மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வாணி, வலசை, சாத்தான்குளம் சாலையில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே ரெயில்வே மந்திரியை நேரில் சந்தித்து இதுகுறித்து கூறி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துவேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. எமரால்டில் மாணவர் விடுதி அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
எமரால்டில் மாணவர் விடுதி அமைக்க வேண்டும் என்று அரசுக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
2. காட்ரம்பாக்கம் கிராமத்தில் பூட்டி கிடக்கும் நூலகத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை
காட்ரம்பாக்கம் கிராமத்தில் பூட்டி கிடக்கும் நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. முட்புதர்கள் மண்டிகிடக்கும் கந்தசாமிபாளையம் குளத்தை ஆழப்படுத்த வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
சிவகிரி அருகே முட்புதர்கள் மண்டி கிடக்கும் கந்தசாமிபாளையம் குளத்தை ஆழப்படுத்த வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
4. கடலில் மூழ்கி இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் - தமிழக அரசுக்கு நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை
கடலில் மூழ்கி இறந்த பாம்பன் மீனவர்கள் குடும்பத்தை நேரில் சந்தித்து நவாஸ்கனி எம்.பி. ஆறுதல் கூறினார். மேலும் தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
5. தேர்தல் வாக்குறுதியின்படி திட்டங்களை நிறைவேற்றுவேன் - நவாஸ்கனி எம்.பி. பேச்சு
தேர்தல் வாக்குறுதியின்படி திட்டங்களை நிறைவேற்றுவேன் என்று நவாஸ்கனி எம்.பி. தெரிவித்தார்.