மாவட்ட செய்திகள்

இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தம் + "||" + In Local Construction work of community welfare Half stop

இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தம்

இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தம்
இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி மக்கள் வீட்டு விசேஷங்களுக்கு வெளியூர்களில் சத்திரங்களை தேடி செல்ல வேண்டி உள்ளது. இந்த பகுதியில் ஊராட்சி சார்பில் ஒரு சமுதாய நலக்கூடம் கட்டி தரவேண்டும் என இருங்காட்டுக்கோட்டை ஊராட்சி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.


இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி முகமை பெரு நிறுவனங்கள் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.40 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட இருங்காட்டுக்கோட்டை போலிச்சியம்மன் கோவில் அருகே இடம் தேர்வு செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணி தொடங்கப்பட்டது.

கட்டுமான பணி பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அஸ்திவாரம் போட்ட இடத்தில் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மக்கள் வரி பணம் இது போன்று வீணாக கூடாது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சமுதாய நலக்கூட பணியினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குமாரச்சேரி ஊராட்சியில் குளம் தூர் வாரும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
குமாரச்சேரி ஊராட்சியில் மும்மாரி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் குமாரச்சேரி காலனி குளத்தை தூர் வாரி கரையை பலப்படுத்தும் பணி நடைபெற்றது.
2. இருளஞ்சேரி ஊராட்சியில் சுடுகாட்டை சூழ்ந்து நிற்கும் மழைநீர் பொதுமக்கள் அவதி
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் மழை பெய்தது. வரத்து கால்வாய் அடைப்பால் மழை நீர் அனைத்தும் சுடுகாட்டை சூழ்ந்து நிற்கிறது.
3. சாலமங்கலம் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை
பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் அருகில் இருந்த ஊராட்சிக்கு சொந்தமான நீர்த்தேக்க தொட்டியை இடிக்கும்போது இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.