பணி பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் கருணை கொலை செய்ய வேண்டும் சி.பி.சி.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் மனு
நாகையில் பணி பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் கருணை கொலை செய்ய வேண்டும் என சி.பி.சி.எல். ஒப்பந்த தொழிலாளர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நாகப்பட்டினம்,
நாகை அருகே பனங்குடியில் உள்ள சி.பி.சி.எல். (சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிட்) ஆலையின் ஒப்பந்த தொழிலாளர்கள் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பனங்குடி கிராமத்தில் உள்ள சி.பி.சி.எல். ஆலையை விரிவாக்கம் செய்ய அந்த நிர்வாகம் முன்வந்துள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதியில் இருந்து ஆலையின் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து ஆலையை எந்நேரமும் மூடும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய 94 ஒப்பந்த தொழிலாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகை தாசில்தார் தலைமையில் 3 கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடை பெற்றது.
கருணை கொலை
ஆனால் சி.பி.சி.எல். நிர்வாகம் எங்களின் பணி பாதுகாப்பிற்கு தற்போது வரை எந்தவித எழுத்து பூர்வ உத்திரவாதத்தையும் அளிக்கவில்லை. எங்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி பாதுகாப்பிற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் எங்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 500-க்கும் மேற்பட்டவர்களை கருணை கொலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நடவடிக்கை
அதேபோல் நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று கொட்டாரக்குடி ஊராட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளிக்க வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கொட்டாரக்குடி பகுதியில் சில மர்ம நபர்கள் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு இடையூறாக உள்ளது. இதுகுறித்து பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story