தொழில் அதிபர்களை சந்தித்து பேச நாராயணசாமி நாளை சிங்கப்பூர் பயணம்
தொழில் அதிபர்களை சந்தித்து பேச முதல்-அமைச்சர் நாராயணசாமி நாளை சிங்கப்பூர் பயணம் மேற்கொள்கிறார்.
புதுச்சேரி,
புதுவையில் புதிய தொழிற்கொள்கை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அப்போது வெளிநாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்கள் பலர் புதுவையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தொழில் அதிபர்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் ஷாஜகான், பிப்டிக் தலைவர் சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் சந்தித்து பேசி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சிங்கப்பூர் தொழில் அதிபர்களை சந்தித்து பேச முதல்-அமைச்சர் நாராயணசாமி திட்டமிட்டுள்ளார்.
சிங்கப்பூர் பயணம்
இதற்காக அவர் நாளை (புதன்கிழமை) சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்கிறார். 4 நாட்கள் சிங்கப்பூரில் முகாமிட்டு தொழில் அதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டு வருகிற 10-ந்தேதி புதுச்சேரி திரும்ப நாராயணசாமி திட்டமிட்டுள்ளார்.
அவருடன் பிப்டிக் தலைவர் சிவா எம்.எல்.ஏ.வும் சிங்கப்பூர் செல்கிறார். சிங்கப்பூரில் சுற்றுலா, மென்பொருள் துறையில் முன்னணி வகிக்கும் தொழிலதிபர்களை சந்திக்கும் இவர்கள் புதுச்சேரியில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கின்றனர்.

Related Tags :
Next Story