நாகர்கோவிலில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Nov 2019 11:00 PM GMT (Updated: 5 Nov 2019 3:37 PM GMT)

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க கோரி அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14–வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே தொடங்கக்கோரி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2–வது கட்ட ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல தலைமை அலுவலகம் முன்பு நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் சிவன்பிள்ளை தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் சங்கரநாராயணபிள்ளை, தோமஸ், தொ.மு.ச. நிர்வாகிகள் பால்ராஜ், கனகராஜ், ஐ.என்.டி.யு.சி. ஆல்பர்ட், டி.டி.எஸ்.எப். தொழிற்சங்க நிர்வாகி சந்தானம், எச்.எம்.எஸ். தொழிற்சங்க நிர்வாகி லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொ.மு.ச. பேரவை செயலாளர் தனசேகர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

கோ‌ஷம்

சி.ஐ.டி.யு. செயல் தலைவர் லெட்சுமணன், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் நீலகண்டன், ஐ.என்.டி. யு.சி. தலைவர் செல்லசிவலிங்கம், டி.டி.எப்.எஸ்.சி. தொழிற்சங்க நிர்வாகி சண்முகம், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ஸ்டீபன் ஜெயக்குமார், ஏ.ஏ.எல்.எல்.எப். பாபு உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங் கள் எழுப்பப்பட்டன.


Next Story