மாவட்ட செய்திகள்

திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் + "||" + Statue of Thiruvalluvar Demonstration for arrest of insulting persons under National Security Act

திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி திருவாரூரில் மாணவர்-இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்,

திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன் தலைமை தாங்கினார். மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.


திருவள்ளுவர் படத்தை காவி நிற அடையாளத்தோடு சமூக வலைதளத்தில் வெளியிட்டு சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கிய பா.ஜனதா கட்சியினரை கண்டித்தும், தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்த சமூக விரோதிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாணவர், இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் அறிவழகன், பாப்பையன், செந்தில்குமார், பாக்யராஜ், சிவரஞ்சித், நல்லசுகம், காந்தி, ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திட்டச்சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
திட்டச்சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. திருப்பூர் மாநகராட்சி ஊழியர் கொலையில் 2 வாலிபர்கள் கைது
திருப்பூர் மாநகராட்சி ஊழியரை கொலை செய்த வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
3. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5. அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீரில் நின்று ஆர்ப்பாட்டம்
பூதலூர் அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீரில் நின்றபடி மக்கள் உரிமை கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.