மாவட்ட செய்திகள்

பூந்தமல்லி அருகே வீடு புகுந்து 17 பவுன் நகை திருட்டு + "||" + 17-pound jewelery theft near Poonthamalli

பூந்தமல்லி அருகே வீடு புகுந்து 17 பவுன் நகை திருட்டு

பூந்தமல்லி அருகே வீடு புகுந்து 17 பவுன் நகை திருட்டு
பூந்தமல்லி அருகே வீடு புகுந்து 17 பவுன் நகை திருடப்பட்டது.
பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை, வரதராஜபுரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 40). டிபன் கடைக்காரர். இவரது மனைவி பொன்னி. நேற்று முன்தினம் ரவி அருகில் உள்ள கண் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டார். வீட்டில் பொன்னி மட்டும் தனியாக இருந்ததால் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளார். ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு ரவி இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


இது குறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

நகை திருட்டு

விசாரணையில், வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 17 பவுன் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவிலில் நகை கண்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் தொழிலாளர்கள் பேரவை வலியுறுத்தல்
நாகர்கோவிலில் நடைபெற உள்ள நகை கண்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று நகை தொழிலாளர்கள் பாதுகாப்பு பேரவை வலியுறுத்தி உள்ளது.
2. பேராவூரணி அருகே நகை திருடிய வீட்டில் மது அருந்திய ஆசாமிகள் பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓடினர்
பேராவூரணி அருகே வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகையை திருடிய ஆசாமிகள் அதே வீட்டில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது பொதுமக்கள் திரண்டதால் அவர்கள் தங்கள் ஆயுதங்களை வீட்டிலேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.
3. கள்ளக்குறிச்சியில், பூட்டிக்கிடந்த வீட்டில் 7 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு
கள்ளக்குறிச்சியில் பூட்டிக்கிடந்த வீட்டில் 7 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
4. நாமகிரிப்பேட்டை பகுதியில் வீடு புகுந்து திருடியவர் கைது 15½ பவுன் நகைகள் மீட்பு
நாமகிரிப்பேட்டை பகுதியில் வீடு புகுந்து நகை திருடியவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 15½ பவுன் நகைகளை மீட்டனர்.
5. ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து ஓய்வுபெற்ற துணை தாசில்தாரிடம் ரூ.1¼ லட்சம் நூதன திருட்டு
ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து ஓய்வுபெற்ற துணை தாசில்தாரிடம் ரூ.1¼ லட்சம் நூதன திருட்டில் ஈடுபட்ட டிப்-டாப் பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.