மாவட்ட செய்திகள்

காயல்பட்டினத்தில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் மீனவர் தற்கொலை + "||" + In kayalpattinat Unmarried, desperate The fisherman committed suicide

காயல்பட்டினத்தில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் மீனவர் தற்கொலை

காயல்பட்டினத்தில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் மீனவர் தற்கொலை
காயல்பட்டினத்தில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் மீனவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆறுமுகநேரி, 

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கொம்புத்துறையைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி. இவருடைய மனைவி மரிய செல்வி. இவர்களுக்கு 8 மகள்கள், 4 மகன்கள். இவர்களில் 6 மகள்களுக்கும், 2 மகன்களுக்கும் திருமணமாகி விட்டது. 8-வது பிள்ளை ஸ்டீபன் சுரே‌‌ஷ் (வயது 36). மீனவரான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்தார்.

நேற்று முன்தினம் இரவில் ஸ்டீபன் சுரே‌‌ஷ் தனது வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அதிகாலையில் கண் விழித்த மரிய செல்வி தன்னுடைய மகன் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த ஸ்டீபன் சுரே‌ஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழிலாளி தற்கொலை
சின்ன காஞ்சீபுரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
2. அரிவாளால் வெட்டி மனைவியை கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை
தாம்பரம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியது.
3. தரகம்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தரகம்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
4. மது பழக்கத்தை கண்டித்தும் திருந்தாததால் மகனை அடித்துக்கொன்று தந்தை தற்கொலை
புதுக்கோட்டை அருகே மது பழக்கத்தை கண்டித்தும் திருந்தாததால் மகனை அடித்துக்கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
5. கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.