மாவட்ட செய்திகள்

குமரி மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு + "||" + Collector ordered to repair the damaged roads in Kumari district immediately

குமரி மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு

குமரி மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
குமரி மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டுள்ளார்.
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார்.


கூட்டத்தில், வளர்ச்சி திட்ட பணிகள் முன்ே-்னற்றம் குறித்து அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். முந்தைய ஆலோசனை கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்து தனித்தனியே கேட்டறிந்து, அதை செயல்படுத்துவதில் இடையூறுகள் இருப்பின் அதற்கான மாற்று ஆலோசனைகளை வழங்கி, வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்கவும், தரமானதாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

குடிநீர் தட்டுப்பாடு

மேலும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசுகையில், மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும். வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்துவதில் இடையூறு ஏதும் இருந்தால் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்து திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் கட்டிட பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையின் மூலம் நடைபெற்று வரும் திட்ட பணிகள், நிலுவையிலுள்ள பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா, மாவட்ட வன அதிகாரி ஆனந்த், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அரி, ரெயில்வேதுறை செயற்பொறியாளர் எழிலன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா, மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாடாலூரில் ஜவுளி பூங்கா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
பாடாலூரில் ஜவுளி பூங்கா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
2. கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம்
புதுச்சேரி கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
3. உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம் அமைச்சர் காமராஜ் பேச்சு
உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம் என திருவாரூரில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கூறினார்.
4. சேலத்தில் கூட்டுறவு வாரவிழா ஆலோசனை கூட்டம்
சேலத்தில் கூட்டுறவு வாரவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
5. குறைதீர்க்கும் நாள் கூட்டம்: காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் அள்ள அனுமதிகோரி மனு
கரூரில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் அள்ள அனுமதிகோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.