தந்தையின் சிலையை நிறுவியது ஏன்? மதுரையில் கமல்ஹாசன் பேட்டி
தந்தையின் சிலையை நிறுவியது ஏன் என்பதற்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.
மதுரை,
நடிகர் கமல்ஹாசனின் தந்தை திருஉருவ சிலை திறப்பு விழா, பரமக்குடியில் இன்று( வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு 8 மணியளவில் மதுரை வந்தார்.மதுரை விமான நிலையத்தில்கட்சியினர்அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும்,அதற்கு அவர் அளித்தபதில்களும் பின்வருமாறு:-
கேள்வி்: நடிகர் ரஜினிகாந்த்துக்கு வழங்கிய விருதை நடிகராகவும், அரசியல்வாதியாகவும் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: 40 வருடங்களுக்கும், 60 வருடங்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. சக நடிகராக எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். விருது வழங்கிய கட்சிக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சில தினங்களுக்கு பிறகு எனக்கும் விருது வழங்கலாம்.
கேள்வி: மாற்று அரசியல் வேண்டும் எனக் கூறி வந்த நீங்கள் தற்போது சிலை திறப்பது சரியா?
பதில்: நான் எனது இடத்தில் எனது தந்தையின் புகைப்படத்திற்கு பதிலாக சிலை வைக்கிறேன். எனது வழிபாட்டிற்காக தான் சிலை நிறுவி இருக்கிறேன். அதில் ஏதும் தவறு இல்லை.
கேள்வி: மத்திய, மாநில அரசுகள் பல லட்சம் திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக கூறி வருகின்றன. இதுபற்றி உங்கள் கருத்து?
பதில்: லட்சங்கள் வேறு, திட்டங்கள் வேறு.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் காரில் புறப்பட்டு பசுமலை பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். அங்கு இரவு தங்கினார்.
இதனை தொடர்ந்து இன்று காலை காரில் புறப்பட்டு பரமக்குடி செல்வதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story