மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் நகையை பறித்த மர்மநபர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கைப்பற்றி போலீஸ் விசாரணை + "||" + The mystery men who snatched the jewelry from the woman Police investigate capturing footage recorded on surveillance camera

பெண்ணிடம் நகையை பறித்த மர்மநபர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கைப்பற்றி போலீஸ் விசாரணை

பெண்ணிடம் நகையை பறித்த மர்மநபர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கைப்பற்றி போலீஸ் விசாரணை
கொல்லங்கோடு அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 1¼ பவுன் நகையை பறித்த மர்மநபர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே கல்வனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மேரிஜெயா (வயது 43). இவர், அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை கடையை திறப்பதற்காக மேரிஜெயா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். மோட்டார் சைக்கிள் மேரிஜெயாவின் அருகில் வந்த போது, பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் மேரி ஜெயாவின் கழுத்தில் கிடந்த 1¼ பவுன் நகையை பறிக்க முயன்றார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நகையை பிடித்து கொண்டு கூச்சலிட்டார். அவருடைய சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். எனினும், மர்ம நபர் நகையை அவரிடம் இருந்து பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறினார். உடனே மர்ம நபர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

பின்னர் இதுகுறித்து மேரிஜெயா கொல்லங்கோடு போ லீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருப்பது தெரிந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றிய போலீசார், மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி 2 மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நெல்லிக்குப்பம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. சீர்காழியில் படுகாயத்துடன் வீட்டில் பிணமாக கிடந்த ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி கொலையா? போலீசார் விசாரணை
சீர்காழியில் ஓய்வு பெற்ற பெண் மருத்துவ அதிகாரி வீட்டில் படுகாயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. பட்டுக்கோட்டை அருகே கழுத்தை அறுத்து பழ வியாபாரி கொலை போலீசார் விசாரணை
பட்டுக்கோட்டை அருகே பாலத்தின் அடியில் பழ வியாபாரி, கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. சிறையில் இருந்த சாத்தான்குளம் தந்தை-மகன் சாவு: “விசாரணையை தீவிரமாக கண்காணிப்போம்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பரபரப்பு உத்தரவு
“சிறையில் இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகன் சாவு குறித்த வழக்கு விசாரணையை தீவிரமாக கண்காணிப்போம்” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.