சபரிமலை சீசனையொட்டி சேலம் வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்


சபரிமலை சீசனையொட்டி சேலம் வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 6 Nov 2019 10:45 PM GMT (Updated: 6 Nov 2019 10:04 PM GMT)

சபரிமலை சீசனையொட்டி சேலம் வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சேலம்,

சபரிமலை சீசனையொட்டி சேலம் வழியாக கேரள மாநிலம் கொல்லத்தில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, கொல்லம்-காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 07212) வருகிற 17,21, 25 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காயன்குளம், கோட்டையம், எர்ணாகுளம், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா வழியாக ராஜமுந்திரிக்கு மறுநாள் மதியம் 2.50 மணிக்கு சென்றடைகிறது.

இதேபோல் கொல்லம்- ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி 07110) வருகிற 23, 27 மற்றும் டிசம்பர் 1-ந் தேதிகளில் கொல்லத்தில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு சேலம் வழியாக மறுநாள் காலை 10.45 மணிக்கு ஐதராபாத்திற்கு சென்றடைகிறது. கொல்லம்-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 06062) வருகிற 16, 23, 30 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரலுக்கு மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்றடைகிறது.

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில்

சென்னை சென்டிரல்-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 06063) வருகிற 17, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கொல்லத்திற்கு மறுநாள் காலை 10.10 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல் கொல்லம்-சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 06064) வருகிற 18, 25 தேதிகளில் கொல்லத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 சென்னை சென்டிரலுக்கு சென்றடைகிறது.

சென்னை சென்டிரல்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண் 06047) வருகிற 21 மற்றும் 28-ந் தேதிகளில் சென்னை சென்டிரலில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு சேலம் வழியாக திருவனந்தபுரத்திற்கு காலை 11.45 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல் மேலும் சில சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story