மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரத்தில், போலி டாக்டர் கைது + "||" + In kancipuram Fake doctor arrested

காஞ்சீபுரத்தில், போலி டாக்டர் கைது

காஞ்சீபுரத்தில், போலி டாக்டர் கைது
காஞ்சீபுரம் நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் முத்து தலைமையில் சுகாதாரத்துறையினர் நேற்று அவருடைய கிளினிக்குக்கு சென்றனர். விசாரணையில், அவர் போலி டாக்டர் என்பது உறுதிபடுத்தப்பட்டது.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் காலண்டர் தெருவில் கிளினிக் நடத்தி வந்தவர் திருமலை (வயது 45). இவர் போலி மருத்துவம் பார்ப்பதாக சுகாதாரத்துறையினருக்கு புகார்கள் வந்தது. இதுகுறித்து காஞ்சீபுரம் நகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் முத்து தலைமையில் சுகாதாரத்துறையினர் நேற்று அவருடைய கிளினிக்குக்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த திருமலையிடம், சுகாதாரத்துறையினர் டாக்டருக்கான சான்றிதழை கேட்டனர். விசாரணையில், அவர் போலி டாக்டர் என்பது உறுதிபடுத்தப்பட்டது.


உடனடியாக கிளினிக்கில் இருந்த ஊசிகள், மருந்துகள் போன்றவற்றை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர். போலி டாக்டர் திருமலையை பெரிய காஞ்சீபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமலையை கைது செய்தனர்.

திருமலை இதுவரை 2 முறை கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளிப்பட்டில் போலி டாக்டர் கைது
பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே ஓமியோபதி படித்து விட்டு ஆங்கில மருத்துவம் அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
2. காஞ்சீபுரத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை சாவு
காஞ்சீபுரத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பரிதாபமாக இறந்தது.
3. காஞ்சீபுரத்தில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு
காஞ்சீபுரத்தில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
4. காஞ்சீபுரத்தில் விநாயகருக்கு ரூ.10 லட்சம் நோட்டுகளாலான மாலை அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
காஞ்சீபுரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் 10 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மாலையாக அலங்காரம் செய்யப்பட்டு சூடப்பட்டது.
5. காஞ்சீபுரத்தில் 46 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவுபெறுகிறது
காஞ்சீபுரத்தில் 46 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.