மாவட்ட செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Young girl commits suicide by hanging

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
களக்காடு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
களக்காடு,

களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை பெருமாள் சன்னதி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜ் என்ற நாராயணன் (வயது 56). இவரது மனைவி அருணா. இவர்களது மகள் ஆனந்தி (27). இவருக்கும் தச்சநல்லூர் புதுக்குளத்தை சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் அருணா கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்தார். இவரது உடல் அடக்க நிகழ்ச்சிக்கு அலெக்ஸ்சின் குடும்பத்தினர் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அலெக்ஸ், ஆனந்தியை அவரது தந்தை வீட்டில் விட்டு சென்றார். இதையடுத்து அருணாவின் 16-ம் நாள் நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஆனந்தி, கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அலெக்சுக்கும், ஆனந்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆனந்தி கீழப்பத்தையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.

பின்னர் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்த களக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும்

இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆவதால் சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீக் தயாள் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருமணமான 4 ஆண்டுகளில் சோகம்: நர்சு தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
ஆவடி அருகே திருமணமாகி 4 ஆண்டுகளில் நர்சாக பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர், கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. இளம்பெண் திடீர் சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு
திடீரென இறந்த இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.