மாவட்ட செய்திகள்

கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் பணி - கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு + "||" + On the Gedilam River near Cuddalore Work on building a door block Collector Anbuselvan Study

கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் பணி - கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு

கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் பணி - கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு
கடலூர் அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதை கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர், 

கடலூர் அருகே விலங்கல்பட்டு கிராம விவசாயிகளுக்கு தேவையான நீரை வழங்கிடவும், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடவும் கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.12½ கோடி மதிப்பீட்டில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த பணிகளை விரைந்து முடிக்கவும், மழைக்காலம் என்பதால் அணைகளின் மதகுகள், கரைகளின் உறுதித்தன்மையை அவ்வப்போது ஆராய்ந்து தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக பண்ருட்டி திருவதிகை மற்றும் திருவந்திபுரம் கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டுப்பட்டுள்ள அணைக்கட்டுகளை கலெக்டர் அன்புசெல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மதகு மற்றும் கரைகளின் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது கடலூர் தாசில்தார் செல்வ குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அனைத்து ஊராட்சிகளிலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளை தொடங்க வேண்டும்; கலெக்டர் உத்தரவு
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்குவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2. சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் ரத்து; கலெக்டர் அறிவிப்பு
மாவட்டத்தில் நடந்த சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் அறிவித்துள்ளார்.
3. ஊரடங்கு உத்தரவை மீறி ஊர் சுற்றுகிறார்கள்: இனிமேலும் இளைஞர்களுக்கு கருணை காட்ட முடியாது - கலெக்டர் அன்புசெல்வன் எச்சரிக்கை
ஊரடங்கு உத்தரவை மீறி ஊர் சுற்றும் இளைஞர்கள் மீது இனிமேலும் கருணை காட்ட முடியாது என கலெக்டர் அன்புசெல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
4. கடலூர் மாவட்டத்தில், நாளை முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது - கலெக்டர் அன்புசெல்வன் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது என்று கலெக்டர் அன்புசெல்வன் கூறினார். இது தொடர்பாக அவர் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
5. பலாப்பழத்திற்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை - கலெக்டர் தகவல்
பலாப்பழத்திற்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.