ராசிபுரத்தில் வக்கீல்கள் உண்ணாவிரதம்


ராசிபுரத்தில் வக்கீல்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 8 Nov 2019 10:30 PM GMT (Updated: 8 Nov 2019 5:32 PM GMT)

ராசிபுரத்தில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராசிபுரம், 

ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் வக்கீல்கள் உண்ணா விரதம் போராட்டம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ராசிபுரம் குற்றவியல் வக்கீல் சங்கத் தலைவர் வக்கீல் காமராஜ் தலைமை தாங்கினார். பார் கவுன்சில் உறுப்பினர் அய்யாவு, ராசிபுரம் குற்றவியல் வக்கீல் சங்க துணைத் தலைவர் வாசுதேவன், செயலாளர் செல்வகுமார், துணை செயலாளர் வேலுசாமி, பொருளாளர் ரவிக்குமார், சிவில் பார் அசோசியேசன் தலைவர் ரத்தினம், சிவில் பார் தலைவர் நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த வக்கீல் பாச்சல் சீனிவாசன் வரவேற்றார்.

சமீப காலமாக போலீசார், வக்கீல்கள் இடையே அடிக்கடி மோதல் போக்கு இருந்து வருகிறது. இதை தவிர்க்க போலீசார்-வக்கீல்கள் இடையே சுமுக உறவு குழுவை போர்க்கால அடிப்படையில் உடனடியாக கூட்ட வேண்டும் என்றும், அரசாணை 744-ஐ அமல்படுத்தும்படியும் நாமக்கல் மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் வக்கீல்கள் நல்வினை விஸ்வராஜ், கங்காதரன், உள்பட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். உண்ணாவிரத்தில் மூத்த வக்கீல்கள் தங்கவேலு, சீனிவாசன், சுந்தரம், எஸ்.பி.சிவக்குமார், முன்னாள் அரசு வக்கீல் நடராஜன், வக்கீல்கள் பிரபு, குமார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் குற்றவியல் வக்கீல்கள் சங்க செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

Next Story