மாவட்ட செய்திகள்

வேதாரண்யம் அருகே, சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது + "||" + Near Vedaranyam The little girl was raped Pokco In the Act The boy was arrested

வேதாரண்யம் அருகே, சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது

வேதாரண்யம் அருகே, சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது
வேதாரண்யம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்,

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது 12 வயது மகளுடன் சரக்கு ஆட்டோவில் ஊர், ஊராக சென்று பாத்திரங்களை விற்பனை செய்து வந்தார். அந்த சரக்கு ஆட்டோவை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி சென்றார்.

இந்த நிலையில் அந்த பெண், நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம் கிராமம் செட்டியார் குத்தகை பகுதியில் தங்கியிருந்து பாத்திரங்கள் வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த சிறுவன் குளிக்க வேண்டும் என அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் தனது மகளை, குளத்தை காண்பிக்குமாறு சிறுவனுடன் அனுப்பி உள்ளார். குளத்துக்கு செல்லும் வழியில் சிறுமியை, சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் வேதாரண்யம் அரசு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஜெயந்தி மற்றும் போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் சிறுவனை கைது செய்தனர்.

சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை - போக்சோ கோர்ட்டு உத்தரவு
அருப்புக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு உத்தரவிட்டது.
2. திருமண ஆசை வார்த்தைக்கூறி சிறுமி பாலியல் பலாத்காரம் - வடமாநில வாலிபருக்கு வலைவீச்சு
திருமண ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
3. விருத்தாசலம் அருகே, சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 8 ஆண்டு சிறை - கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
விருத்தாசலம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.