மாவட்ட செய்திகள்

அம்மா ஸ்கூட்டர் பெறுவதற்கு பயனாளிகளை தேர்வு செய்ய கால நீட்டிப்பு - கலெக்டர் தகவல் + "||" + Extension of time to select beneficiaries to get a mother scooter - Collector Information

அம்மா ஸ்கூட்டர் பெறுவதற்கு பயனாளிகளை தேர்வு செய்ய கால நீட்டிப்பு - கலெக்டர் தகவல்

அம்மா ஸ்கூட்டர் பெறுவதற்கு பயனாளிகளை தேர்வு செய்ய கால நீட்டிப்பு - கலெக்டர் தகவல்
அம்மா ஸ்கூட்டர் பெறுவதற்கு பயனாளிகளை தேர்வு செய்ய கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகப்பட்டினம்,

அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டிற்கான பயனாளிகளை தேர்வு செய்ய கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் பெற்று பரிசீலனை செய்து பயனாளிகளை தேர்வு செய்ய வருகிற 20-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பவர்களுக்கு தகுதிகளாக பணிபுரியும் மகளிராக இருக்க வேண்டும், 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்கவேண்டும். வயது 18 முதல் 40 வரை இருக்க வேண்டும். தனிநபர் வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மேலும் மானியம் பெற ஓட்டுனர் உரிமம் அவசியம் பெற்றிருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
நாகையில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரவீன் நாயர் தலைமையில் நடைபெற்றது.