மாவட்ட செய்திகள்

திருவாடானை பகுதியில் சூறாவளி காற்று, மரங்கள் வேரோடு சாய்ந்தன + "||" + Cyclone winds in the Thiruvadanai area, trees were uprooted

திருவாடானை பகுதியில் சூறாவளி காற்று, மரங்கள் வேரோடு சாய்ந்தன

திருவாடானை பகுதியில் சூறாவளி காற்று, மரங்கள் வேரோடு சாய்ந்தன
திருவாடானை பகுதியில் சூறாவளி காற்று வீசியது இதில் வேரோடு சாய்ந்தன.
தொண்டி,

திருவாடானை தாலுகாவில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மங்களக்குடி அருகே உள்ள கண்ணன்புஞ்சை கிராமத்தில் வீசிய பலத்த சூறாவளி காற்றின் காரணமாக மரம் சாய்ந்து விழுந்ததில் அருகில் இருந்த ஒரு வீடு சேதம் அடைந்தது. இதேபோல தொண்டி பழைய போலீஸ் நிலையம் முன்பு கிழக்கு கடற்கரை சாலை அருகே நின்ற வேப்பமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டது. அதனைத்தொடர்ந்து தொண்டி போலீசார் வேறு வழியாக மாற்றி அமைத்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இதுகுறித்த தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

இதேபோல மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லூர் கிராமத்தின் அருகே சாலை ஓரத்தில் நின்ற மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. அந்த நேரத்தில் அருகில் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. இதுதவிர இந்த தாலுகாவில் உள்ள பல்வேறு இடங்களில் பலத்த சூறாவளி காற்றினால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேலும் கூரை வீடுகள், மின் கம்பங்களும் சேதமடைந்தன.

தொடர்புடைய செய்திகள்

1. ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில், சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு
ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
2. ஆரல்வாய்மொழி பகுதியில் சூறாவளி காற்றில் 3 ஆயிரம் வாழைகள் சேதம்
ஆரல்வாய்மொழி பகுதியில் சூறாவளி காற்றில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.
3. கூடலூர் பகுதியில், சூறாவளி காற்றில் வாழைகள் சேதம் - மின்சார வினியோகம் பாதிப்பு
கூடலூர் பகுதியில் சூறாவளி காற்று தொடர்ந்து வீசுவதால் வாழைகள் சாய்ந்து விவசாயிகள் பல லட்சம் நஷ்டம் அடைந்துள்ளனர். மேலும் மின்சார வினியோகமும் பாதிக்கப்பட்டது.
4. திருவண்ணாமலையில் கனமழையுடன் சூறாவளி காற்று வீசி 70 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன
திருவண்ணாமலையில் கனமழையுடன் சூறாவளி காற்று வீசியதில் 70 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன.
5. சூறாவளி காற்றுடன் பலத்த மழை, மரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 வாலிபர்கள் பலி - பேரணாம்பட்டில் பரிதாபம்
பேரணாம்பட்டு பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது புளியமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.