செல்போன் பறிப்பு வழக்கில் 4 பேர் கைது


செல்போன் பறிப்பு வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 9 Nov 2019 3:45 AM IST (Updated: 9 Nov 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் பறிப்பு வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

படப்பை, 

காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த மேலாத்தூர் பகுதியில் 4 பேர் பதுங்கி இருப்பதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் 4 பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சோமங்கலம் மேலாத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற வல்லரசு (வயது 25), ஆனந்தராஜ் (23), அஜித் (20) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர்கள் செய்யூரை அடுத்த சூனாம்பேடு இல்லீடு கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரதாப் என்பவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது.

Next Story