மாவட்ட செய்திகள்

பாகாயம் அருகே, ஓடும் ஆம்புலன்சில் ‘குவா குவா’ + "||" + Near Bagayam In a running ambulance Gua Gua

பாகாயம் அருகே, ஓடும் ஆம்புலன்சில் ‘குவா குவா’

பாகாயம் அருகே, ஓடும் ஆம்புலன்சில் ‘குவா குவா’
பாகாயம் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அடுக்கம்பாறை,

அடுக்கம்பாறை அருகே உள்ள மேல்அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மனைவி வர்ஷினி (வயது 20). இவர் கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அவர் வேப்பங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வர்ஷினியை பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி, அவரை வேப்பங்குப்பத்தில் இருந்து நேற்று காலையில் பாகாயம் தனியார் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்துச்சென்றனர். ஆம்புலன்சை டிரைவர் பரந்தாமன் ஓட்டினார். மருத்துவ உதவியாளராக செல்வி இருந்தார்.

பாகாயம் அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது வர்ஷினிக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ உதவியாளர் செல்வி பிரசவ சிகிச்சை மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து வர்ஷினிக்கு ஓடும் ஆம்புலன்சிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு குழந்தைக்கும், தாய்க்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.