மாவட்ட செய்திகள்

கூட்டுறவு வார விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு-கட்டுரை போட்டி நாகர்கோவிலில் 12-ந் தேதி நடக்கிறது + "||" + Student-Students Talk-essay Competition to be held in Nagercoil on 12th

கூட்டுறவு வார விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு-கட்டுரை போட்டி நாகர்கோவிலில் 12-ந் தேதி நடக்கிறது

கூட்டுறவு வார விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு-கட்டுரை போட்டி நாகர்கோவிலில் 12-ந் தேதி நடக்கிறது
கூட்டுறவு வார விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நாகர்கோவிலில் 12-ந் தேதி நடைபெறுகிறது.
நாகர்கோவில்,

66-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் 12-ந் தேதி காலை 9 மணிக்கு நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. மேலும் கூட்டுறவு துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கும் பேச்சு, கட்டுரை போட்டி நடக்கிறது.


பேச்சு போட்டியில் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் 10 நிமிடத்திற்கு மிகாமல் தமிழில் மட்டும் பேச வேண்டும். இதே போல கட்டுரை போட்டியும் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் மட்டும் நடைபெறும்.

போட்டிகள்

இதில் மாணவர்களுக்கான போட்டியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி காலை 9 மணி முதல் 11.30 மணி வரை, 9, 10-ம் வகுப்புக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவின் பங்கு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, 11, 12-ம் வகுப்புக்கு புதிய இந்தியாவில் கூட்டுறவின் பங்கு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, 6 முதல் 8-ம் வகுப்பு வரை கிராமப்புற மகளிர் முன்னேற்றத்தில் கூட்டுறவின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரை போட்டி மதியம் 2.30 மணிக்கு, 9, 10-ம் வகுப்புக்கு கூட்டுறவுகளில் புதிய தொழில் நுட்ப சேவைகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி மதியம் 2.30 மணிக்கு, 11, 12-ம் வகுப்புக்கு கூட்டுறவின் வாயிலாக அரசின் புதிய முயற்சிகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி மதியம் 2.30 மணிக்கு, 6 முதல் 8 வரை தேசிய ஒருமைப்பாடு என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை நடக்கிறது.

அதுபோல, கூட்டுறவுதுறை அலுவலர்களுக்கான பேச்சுப்போட்டியில், கூட்டுறவுகளில் அதிகாரம் பரவலாக்கல் என்ற தலைப்பில் காலை 9 மணி முதல் 11 மணி வரை, கட்டுரை போட்டியில் வருங்கால கூட்டுறவு வளர்ச்சிக்கு துறை அலுவலர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை, கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான பேச்சுப்போட்டியில் கூட்டுறவு நிறுவனங்களும் பொருளாதார மேம்பாடும் என்ற தலைப்பில் காலை 9 மணி முதல் 11 மணி வரை, கட்டுரை போட்டியில் சமூக பொருளாதார மேம்பாட்டில் கூட்டுறவின் தாக்கம் என்ற தலைப்பில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.

பரிசு

இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவிகள் தாங்கள் படிக்கும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரிடம் அத்தாட்சி பெற்று வர வேண்டும். கூட்டுறவு துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் சம்பந்தப்பட்ட துறை தலைமை அலுவலர்கள் மற்றும் சங்க தலைவரிடம் அத்தாட்சி பெற்று போட்டியில் கலந்துகொள்ள வேண்டும். இந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு கூட்டுறவு வாரவிழாவின் போது பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் நடந்த விழாவில் அரை நிர்வாணமாக விருது பெற்ற பாப் பாடகி
அமெரிக்காவில் நடந்த விழாவில் அரை நிர்வாணமாக பாப் பாடகி ஒருவர் விருது பெற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
2. கூட்டுறவு வார விழாவையொட்டி மாணவ–மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டி எஸ்.ஏ.அசோகன் தொடங்கி வைத்தார்
கூட்டுறவு வார விழாவையொட்டி மாணவ–மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளை ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன் தொடங்கி வைத்தார்.
3. உயர்கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குவதால் இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது
உயர்கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குவதால் இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என வி.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார்.
4. மாவட்டத்தில் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5. காரைக்குடி சிக்ரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா
காரைக்குடி சிக்ரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது.