மாவட்ட செய்திகள்

வீட்டில் தூங்கிய போது மின்னல் தாக்கி சிறுமி பலி தந்தை உள்பட 2 பேர் படுகாயம் + "||" + Two people, including their father, were struck by lightning while sleeping at home

வீட்டில் தூங்கிய போது மின்னல் தாக்கி சிறுமி பலி தந்தை உள்பட 2 பேர் படுகாயம்

வீட்டில் தூங்கிய போது மின்னல் தாக்கி சிறுமி பலி தந்தை உள்பட 2 பேர் படுகாயம்
இண்டூர் அருகே வீட்டில் தூங்கிய போது மின்னல் தாக்கி சிறுமி பலியானாள். அவளுடைய தந்தை உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் இண்டூரை அடுத்துள்ள கும்பலப்பாடியைச் சேர்ந்தவர் சிவசக்தி. கூலித்தொழிலாளி. இவருடைய மகள் மோனிஷா (வயது 6). சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் இரவு சிவசக்தி, இவரது மனைவி வினோதா, மகள் மோனிஷா, மகன் ஹரிஷ் ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.


இதனிடையே அந்த பகுதியில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது திடீரென வீட்டின் மீது மின்னல் தாக்கியது. இதில் தூங்கி கொண்டிருந்த சிறுமி மோனிஷா மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள். மேலும் அருகில் படுத்து இருந்த சிவசக்தி படுகாயம் அடைந்தார். இவருடைய மனைவி வினோதா, மகன் ஹரிஷ் ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர்.

தீவிர சிகிச்சை

மேலும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிவசக்தியின் அண்ணன் பச்சியப்பன் மகன் அன்பரசு (16) என்பவரும் மின்னல் தாக்கியதில் காயம் அடைந்தார். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் காயம் அடைந்த சிவசக்தி, அன்பரசு ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் இண்டூர் போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; பெயிண்டர் கைது
வெள்ளமடம் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டர் கைது செய்யப்பட்டார்.
2. எலச்சிபாளையத்தில் கார் மோதி டிரைவர் பலி
எலச்சிபாளையத்தில் கார் மோதி லாரி டிரைவர் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. சாலையோரம் நின்ற வேன் மீது பஸ் மோதல்; 3 பெண்கள் பலி வடமாநில சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த துயரம்
சாலையோரம் நின்ற வேன் மீது பஸ் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலியானார்கள். மேலும் அவர்களுடன் வந்த 10 பேர் காயம் அடைந்தனர். வடமாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்தவர்களுக்கு இந்த துயரம் நிகழ்ந்தது.
4. மதுரை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணியில் விபத்து: கான்கிரீட் கலவை லாரி சக்கரத்தில் நசுங்கி 3 தொழிலாளர்கள் பலி
மதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்காக இரவுப்பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் ஓய்வுக்காக சற்று நேரம் தூங்கிய போது, கான்கிரீட் கலவை லாரியின் சக்கரத்தில் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
5. நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி அண்ணன்-தங்கை பலி; 7 பேர் படுகாயம்
பள்ளிகொண்டா அருகே நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் அண்ணன்-தங்கை பரிதாபமாக இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.