கிண்டல் செய்த மாணவர்களை அடித்து, உதைத்த இளம்பெண்; சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்


கிண்டல் செய்த மாணவர்களை அடித்து, உதைத்த இளம்பெண்; சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
x
தினத்தந்தி 10 Nov 2019 4:15 AM IST (Updated: 10 Nov 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

ஹாசன் பஸ் நிலையத்தில் கிண்டல் செய்த மாணவர்களை இளம்பெண் ஒருவர் சரமாரியாக அடித்து, உதைத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-

ஹாசன், 

ஹாசன் டவுன் அரசு பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஹாசன் டவுன் பஸ் நிலையத்தில் பஸ் ஏறுவதற்காக கல்லூரி மாணவிகள் 2 பேர் வந்துள்ளனர். அப்போது அங்கு வேறொரு கல்லூரியை சேர்ந்த 2 மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் இந்த மாணவிகளை கேலி, கிண்டல் செய்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஒரு மாணவி, அவர்களில் ஒருவரை பிடித்து சரமாரியாக அடித்து, உதைத்தார். மேலும் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றொரு மாணவர், விரைந்து வந்தார். அவரையும் மாணவி சரமாரியாக அடித்து, உதைத்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றொரு மாணவி, அந்த மாணவியை பிடித்து அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றார். அந்த சமயத்தில் அந்த மாணவர்கள் மாணவியை தாக்க பாய்ந்து வந்தார். அப்போது அங்கு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்கள், அந்த மாணவர்களையும், மாணவியையும் தடுத்து நிறுத்தினார்கள்.

பின்னர் அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனை யாரோ செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹாசன் டவுன் பஸ் நிலையத்தில் கிண்டல் செய்த மாணவர்களை இளம்பெண்ணான கல்லூரி மாணவி அடித்து, உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story