மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணி: தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக மின்சார ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு + "||" + Maintenance work Electricity trains canceled in part between Tambaram-Chengalpattu Southern Railway Announcement

பராமரிப்பு பணி: தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக மின்சார ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி: தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக மின்சார ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதியாக மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தாம்பரம், 

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இரவு 8.01, 9.18 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலும், செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரவு 10.15, 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையிலும் நாளை(திங்கட்கிழமை)பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* கடற்கரை-செங்கல்பட்டு இடையே அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.50, 6.05, 6.43 மணி, மாலை 5.18 மணி, இரவு 8.01, 9.18 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலும், செங்கல்பட்டு-கடற்கரை இடையே அதிகாலை 3.55, 4.35, 4.50, 6.40, 6.55, 8.40 மணி, இரவு 7.25, 10.15, 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையிலும் நாளை மறுநாள்(12-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்: மின்சார வாரியம் தகவல்
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நாளை (புதன்கிழமை) மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
2. சிங்கப்பெருமாள்கோவில்- செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில்கள் இன்று பகுதியாக ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சிங்கப்பெருமாள்கோவில்- செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில்கள் இன்று பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
3. பராமரிப்பு பணி காரணமாக துறைமுக வழித்தடத்தில் இன்று மின்சார ரெயில் சேவை ரத்து
பராமரிப்பு பணி காரணமாக துறைமுக வழித்தடத்தில் இன்று மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...