அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலி: மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு : மும்பையில் 144 தடை உத்தரவு


அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலி: மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு : மும்பையில் 144 தடை உத்தரவு
x
தினத்தந்தி 10 Nov 2019 5:35 AM IST (Updated: 10 Nov 2019 5:35 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானதை அடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

அயோத்தி வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மராட்டியம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை, தானே, புனே உள்ளிட்ட நகரங்களில் முக்கிய இடங்கள், ரெயில்நிலையங்கள் மற்றும் வழிப்பாட்டு தலங்கள் அமைந்து உள்ள பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மும்பையில் அசாம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.

அயோத்தி தீர்ப்பு வெளியானதை அடுத்து மும்பையில் மட்டும் சுமார் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இதேபோல சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவுவதை தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story