அயோத்தி வழக்கு தீர்ப்பு காரணமாக மராட்டியத்தில் ஆட்சி அமைய மேலும் தாமதம் ஏற்படும்; சஞ்சய் ராவத் சொல்கிறார்


அயோத்தி வழக்கு தீர்ப்பு காரணமாக மராட்டியத்தில் ஆட்சி அமைய மேலும் தாமதம் ஏற்படும்; சஞ்சய் ராவத் சொல்கிறார்
x
தினத்தந்தி 10 Nov 2019 12:16 AM GMT (Updated: 10 Nov 2019 12:16 AM GMT)

அயோத்தி வழக்கு தீர்ப்பு காரணமாக மராட்டியத்தில் ஆட்சி அமைய மேலும் தாமதம் ஆகும் என்று சஞ்சய் ராவத் கூறினார்.

மும்பை,

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய அயோத்தி வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமல் கோவில் கட்ட தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்த சிவசேனா, அங்கு ராமர் கோவில் கட்டலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்று உள்ளது.

இந்த நிலையில், அயோத்தி தீர்ப்பு காரணமாக மராட்டியத்தில் புதிய ஆட்சி அமைவதில் மேலும் தாமதம் ஏற்படும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பைலே மந்திர், பிர் சர்கார்', ‘அயோத்தி மே மந்திர், மகாராஷ்டிரா மே சர்கார்' ஜெய்ஸ்ரீராம் (முதலில் கோவில், பின்னர் அரசு, அயோத்தியில் கோவில், மராட்டியத்தில் அரசு) என பதிவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக சஞ்சய் ராவத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அடுத்த இரண்டு நாட்களுக்கு அயோத்தி தீர்ப்பு பற்றி தான் பேசப்படும். புதிய ஆட்சி பற்றிய பேச்சு இருக்காது என்றார்.

Next Story