மாவட்ட செய்திகள்

மலையோர பகுதியில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு; 3–வது நாளாக குளிக்க தடை + "||" + Heavy rains flooding the hillside; Bathing Prohibition for 3rd day

மலையோர பகுதியில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு; 3–வது நாளாக குளிக்க தடை

மலையோர பகுதியில் கன மழை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு; 3–வது நாளாக குளிக்க தடை
குமரி மாவட்டத்தில் மலையோர பகுதியில் பெய்த கன மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 3–வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கனமழை பெய்தது. அதன்பிறகு மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கியது. இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக அணை பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளில் கன மழை பெய்கிறது. அதே சமயம் நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட கிழக்கு மாவட்ட பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது.


குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையில் அதிகபட்சமாக அடையாமடையில் 126 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதே போல குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:–

களியல்–4.4, சிற்றார் 1–10.4, குழித்துறை–38, பேச்சிப்பாறை–2, பெருஞ்சாணி–3.8, புத்தன்அணை–3, சிற்றார் 2–13.6, சுருளோடு–13.4, தக்கலை–16, பாலமோர்–9.2, மாம்பழத்துறையாறு–20, ஆனைகிடங்கு–25.6, முக்கடல்–7 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

அணை நிலவரம்

மழை காரணமாக அணைகள் மற்றும் குளங்கள் நிரம்பியுள்ளன. எனினும் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு 608 கனஅடி தண்ணீர் வந்தது.

இதே போல பெருஞ்சாணி அணைக்கு 668 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு 261 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 12 கனஅடியும் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. அதே சமயத்தில் பெருஞ்சாணி அணையில் இருந்து 500 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணையில் இருந்து 12 கனஅடியும், சிற்றார் 1 அணையில் இருந்து 261 கனஅடியும் தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது.

திற்பரப்பு அருவி

மலையோர பகுதியில் பெய்து வரும் கன மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அருவியில் இருந்து ஆக்ரோ‌ஷமாக பாய்ந்தோடும் தண்ணீர் அங்குள்ள நீச்சல்குளத்தையும், கல் மண்டபத்தையும் மூழ்கடித்து செல்கிறது. இதனால் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடை நேற்று 3–வது நாளாக நீடித்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்தனர். அவர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணியின் ஆட்டம் மழையால் ரத்து
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், மும்பை அணியின் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
2. கூத்தாநல்லூர் பகுதியில் பலத்த மழை: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் அழுகும் அபாயம் விவசாயிகள் கவலை
கூத்தாநல்லூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
3. திருவாரூரில் கனமழை: தியாகராஜர் கோவிலுக்குள் தண்ணீர் குளம்போல் தேங்கியது
திருவாரூரில் பெய்த கனமழையின் காரணமாக தியாகராஜர் கோவிலுக்குள்் தண்ணீர் புகுந்து குளம் போல் தேங்கியது. இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
4. பாபநாசம், மணிமுத்தாறு பகுதியில் மழை
பாபநாசம், மணிமுத்தாறு உள்பட ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
5. தொடர் விடுமுறையால் கிரு‌‌ஷ்ணகிரி அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை காரணமாக கிரு‌‌ஷ்ணகிரி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை