மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் + "||" + Thiruvannamalai At the Arunachaleswarar temple The crowd of devotees waved

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மருமகள் சாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள். ஏனென்றால் இந்த மலை சிவனாக போற்றப்படுகிறது. மேலும் புண்ணியம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். எனவே ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் திருவண்ணாமலை நகரம் பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கும்.

மேலும் சித்ரா பவுர்ணமி, மகா தீபத்திருநாள் போன்ற விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். வாரவிடுமுறை நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அதன்படி, நேற்று கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை 5 மணி அளவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மருமகள் ராதா கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர், கோ பூஜை மற்றும் சாமிக்கு நடந்த அபிஷேகத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மருமகள் வருகையையொட்டி போலீசார் கோவில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த மாதத்துக்கான பவுர்ணமி இன்று (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7.40 மணி வரை பவுர்ணமி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி - கலெக்டர் பங்கேற்பு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் கந்தசாமி, அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
2. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து , அருணாசலேஸ்வரர் கோவிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
3. ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நிறைவு: அருணாசலேஸ்வரர் கோவில் சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி
ஆடிப்பூர பிரம்மோற் சவ விழா நிறைவை முன்னிட்டு அருணா சலேஸ்வரர் கோவில் சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.