மாவட்ட செய்திகள்

பட்டிவீரன்பட்டி அருகே, தோட்டத்தில் பதுக்கிய 21 கிலோ கஞ்சா பறிமுதல் + "||" + Patti Veeranpatti near, 21 kg hashish seized in the garden patukkiya

பட்டிவீரன்பட்டி அருகே, தோட்டத்தில் பதுக்கிய 21 கிலோ கஞ்சா பறிமுதல்

பட்டிவீரன்பட்டி அருகே, தோட்டத்தில் பதுக்கிய 21 கிலோ கஞ்சா பறிமுதல்
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பட்டிவீரன்பட்டி, 

பட்டிவீரன்பட்டி அருகே நெல்லூரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கஞ்சா பதுக்கி இருப்பதாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை செய்தனர்.

அந்த தோட்டத்தில் மோட்டார் அறை மற்றும் அதன் அருகில் சுமார் 21 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த கஞ்சாவை கைப்பற்றினர். மேலும் அந்த தோட்டத்தில் இருந்த சரவணன் (வயது 29), நிலக்கோட்டை சித்தர்கள் நத்தத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (30), முத்துராஜ் (29) ஆகிய 3 பேரையும் போலீசார் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சாவை ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் இருந்து வாங்கி வந்து பதுக்கி வைத்திருப்பதும், அதனை பட்டிவீரன்பட்டி பகுதியில் விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மணல் கடத்தல்; 3 பேர் கைது
மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. கோஷ்டி மோதல்; 3 பேர் கைது
தேனி அருகே நடந்த கோஷ்டி மோதலில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. மணல் கடத்த முயன்ற 3 பேர் கைது
தக்கோலம் அருகே மணல் கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. மாங்காடு அருகே, டிரைவர் கொலையில் 3 பேர் கைது - கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்தது அம்பலம்
மாங்காடு அருகே டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததால் அவரை கொன்றதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
5. சேத்தியாத்தோப்பு அருகே, பெண் கொலையில் மேலும் 3 பேர் கைது
சேத்தியாத்தோப்பு அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.