மாவட்ட செய்திகள்

ஊத்துக்குளியில் பயங்கரம்: மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற தொழிலாளி + "||" + Terror in Uthukkuli His wife Killed their throats cut Worker

ஊத்துக்குளியில் பயங்கரம்: மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற தொழிலாளி

ஊத்துக்குளியில் பயங்கரம்: மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற தொழிலாளி
ஊத்துக்குளியில் மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற தொழிலாளி தற்கொலைக்கு முயன்றதால் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஊத்துக்குளி, 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மேற்கு வீதியை சேர்ந்தவர் நிசார் அகமது (வயது 32). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஹசீனா (21). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் அராபத் என்ற மகன் உள்ளான். ஹசீனாவின் தாயார் ரெய்சானாவும் அந்த பகுதியில் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி மகள் ஹசீனா வீட்டிற்கு சென்று வருவார்.

இந்த நிலையில் நிசார் அகமதுவுக்கும், ஹசீனாவுக்கும் இடையே சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டைபோட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ரெய்சானா, தனது மகள் ஹசீனா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீ்ட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வீட்டிற்குள் குழந்தை அராபத் அழும் குரல் கேட்டது. இதையடுத்து ரெய்சானா தனது மகளின் பெயரை சொல்லி கதவை திறக்குமாறு கூறினார். நீண்ட நேரமாக கதவை தட்டியும், பெயரை சொல்லியும், கதவு திறக்கப்படவில்லை.

இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து ரெய்சானா வீட்டிற்குள் சென்றார். அப்போது அங்கு ரத்த வெள்ளத்தில் ஹசீனா பிணமாக கிடந்தார். நிசார் அகமதுவும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மயக்கம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். . தாய்-தந்தை பக்கத்தில் குழந்தை அழுது கொண்டிருந்தது. இதை பார்த்ததும் ரெய்சானா அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்தனர். அங்கு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த ஹசீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நிசார் அகமதுவையும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குடும்பத்தகராறு காரணமாக ஹசீனாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த நிசார் அகமது, தனது கழுத்தையும் கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வீட்டின் அருகில் உள்ளவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூபாய் நோட்டுக்குள் வெள்ளை தாள்களை வைத்து ஏமாற்றிய கணவன்-மனைவி கைது
நாமக்கல்லில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூபாய் நோட்டுக்குள் வெள்ளை தாள்களை வைத்து ஏமாற்றிய கணவன்-மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. பேராவூரணி அருகே மதுபோதையில் தகராறு செய்த விவசாயி வெட்டிக்கொலை மனைவி கைது
பேராவூரணி அருகே மதுபோதையில் தகராறு செய்த விவசாயியை வெட்டிக்கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
3. ஆறுமுகநேரி அருகே, தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
ஆறுமுகநேரி அருகே, தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. பாவூர்சத்திரம் அருகே பயங்கரம்: தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூரக்கொலை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
பாவூர்சத்திரம் அருகே தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொடூரமாக கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. நாகர்கோவிலில் ‘மசாஜ் சென்டர்’ பெயரில் விபசாரம்; கணவன்-மனைவி கைது
நாகர்கோவிலில் ‘மசாஜ் சென்டர்‘ என்ற பெயரில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.