மாவட்ட செய்திகள்

வேளாங்கண்ணி கடலில் மூழ்கி சுற்றுலா பயணி சாவு - பெங்களூருவை சேர்ந்தவர் + "||" + Velankanni drowning Death of the Tourist - From Bangalore

வேளாங்கண்ணி கடலில் மூழ்கி சுற்றுலா பயணி சாவு - பெங்களூருவை சேர்ந்தவர்

வேளாங்கண்ணி கடலில் மூழ்கி சுற்றுலா பயணி சாவு - பெங்களூருவை சேர்ந்தவர்
வேளாங்கண்ணி கடலில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த சுற்றுலா பயணி பரிதாபமாக இறந்தார்.
வேளாங்கண்ணி,

கர்நாடக மாநிலம் பெங்களூரு தீனபந்து நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் சுரேஷ் (வயது 38). இவர் தனது மனைவி ரேணுகா, மகன்கள் சபரீஷ், சகிலேஷ் ஆகியோருடன் நேற்றுமுன்தினம் காலை வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளார். பின்னர் அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார். அதனை தொடர்ந்து மாலை நேரத்தில் கடலில் சுரேஷ் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதில் மூச்சு திணறி சுரேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழையூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 25 அடி ஆழ தரைமட்ட கிணற்றில் தவறிவிழுந்தவர் சாவு புல் அறுக்க சென்றபோது பரிதாபம்
மணக்குடி அருகே புல் அறுக்க சென்றவர், 25 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
2. ராயப்பேட்டை வணிக வளாகத்தில் விஷவாயு தாக்கி வாலிபர் சாவு தம்பியை காப்பாற்றியவருக்கு நேர்ந்த சோகம்
ராயப்பேட்டை வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மயங்கி விழுந்த தம்பியை காப்பாற்றிய வாலிபர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
3. திருவள்ளூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் சாவு
திருவள்ளூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
4. ஓமலூர் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு
ஓமலூர் அருகே பள்ளி மாணவர் கிணற்றில் மூழ்கி பலியானார்.
5. கோவையில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி மூதாட்டி உள்பட 2 பேர் சாவு
கோவையில் மின்சாரம் தாக்கி மூதாட்டி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.