சர்வாதிகாரியாக செயல்படுவேன் என மு.க.ஸ்டாலின் கூறியது ஏன்? கனிமொழி எம்.பி. விளக்கம்


சர்வாதிகாரியாக செயல்படுவேன் என மு.க.ஸ்டாலின் கூறியது ஏன்? கனிமொழி எம்.பி. விளக்கம்
x
தினத்தந்தி 11 Nov 2019 10:45 PM GMT (Updated: 11 Nov 2019 10:14 PM GMT)

சர்வாதிகாரியாக செயல்படுவேன் என மு.க.ஸ்டாலின் கூறியது ஏன்? என்பதற்கு கனிமொழி எம்.பி. விளக்கம் அளித்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனை குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கனிமொழி எம்.பி. நேற்று காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். இங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை ஆகும். தி.மு.க. உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பை தி.மு.க. தலைவர் வெளியிடுவார்.

தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டு முதலீடுகளை பெற வெளிநாடு சென்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அவர்கள் எந்த முதலீட்டையும் பெற்றதாக தெரியவில்லை. அவர்கள் மக்கள் பணத்தில் வெளிநாடு செல்கிறார்கள்.

மராட்டியத்தில் பா.ஜனதா- சிவசேனா இடையே உள்ள பிரச்சினையால் தேர்தல் முடிந்த பிறகும் ஆட்சி அமைக்க முடியாமல் இருக்கிறார்கள். தொடர்ந்து என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும்.

மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என்று சொல்வது, கட்சியின் வளர்ச்சிக்காக முடிவு எடுக்க வேண்டும் என்றால் அதை தைரியமாக, தெளிவாக எடுக்க வேண்டும் என்பதற்காக தான் அவர் அப்படி கூறினார். இதனை அரசியல் காரணங்களுக்காக மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story