மாவட்ட செய்திகள்

கீழ்கட்டளையில் வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு + "||" + 18-pound jewelry theft

கீழ்கட்டளையில் வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு

கீழ்கட்டளையில் வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு
கீழ்கட்டளையில், வீடு புகுந்து 18 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அருகே உள்ள கீழ்கட்டளை அம்பாள் நகர் சுப்பிரமணிய தெருவைச் சேர்ந்தவர் முகமது ஆரிப் (வயது 61). இவர், வண்டலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.


நேற்று முன்தினம் மாலை முகமது ஆரிப், வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை செருப்புகள் வைக்கும் இடத்தில் மறைத்து வைத்துவிட்டு குடும்பத்துடன் ராயப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

18 பவுன் நகை திருட்டு

பின்னர் இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்து இருந்த 18 பவுன் தங்க நகைகள் திருட்டுபோய் இருப்பது தெரிந்தது.

முகமது ஆரிப், வீட்டை பூட்டிவிட்டு சாவியை செருப்புகள் வைக்கும் இடத்தில் மறைத்து வைத்துவிட்டு செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள், சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்து உள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த நகையை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

இதுபற்றி மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூரில் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது
திருப்பூரில் தொடர் வழிப்பறி, வீடு மற்றும் கடைகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. நெல்லையில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: மோட்டார் சைக்கிளில் ‘போலி நம்பர் பிளேட்’ பொருத்திய கொள்ளையர்கள்
நெல்லையில் அரிவாளை காட்டி பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கொள்ளையர்கள், தங்களது மோட்டார் சைக்கிளில் போலி நம்பர் பிளேட் பயன்படுத்தியது தெரியவந்து உள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
3. வடக்கன்குளத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பணம் திருட்டு
வடக்கன்குளத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்று விட்டனர். வீட்டின் உரிமையாளார் 100 பவுன் நகைகளை உறவினர் வீட்டில் கொடுத்து சென்றதால் 100 பவுன் நகை தப்பியது.
4. சாத்தான்குளம் அருகே ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண்ணிடம் 9½ பவுன் நகை பறிப்பு
சாத்தான்குளம் அருகே ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண்ணிடம் 9½ பவுன் நகையை பறித்து சென்ற 2 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய இருந்த கன்டெய்னர் பெட்டிகளை உடைத்து ரூ.50 லட்சம் டயர்கள் திருட்டு
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய இருந்த 2 கன்டெய்னர் பெட்டிகளை உடைத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான டயர்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.