மாவட்ட செய்திகள்

சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை தொடங்கியது 12 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது + "||" + The first flight with 12 passengers left for Chennai-Jaffna

சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை தொடங்கியது 12 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது

சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை தொடங்கியது 12 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது
சென்னை-யாழ்ப்பாணம் இடையே விமான சேவை நேற்று தொடங்கியது. சென்னையில் இருந்து 12 பயணிகளுடன் முதல் விமானம் யாழ்ப்பாணம் புறப்பட்டு சென்றது. வாரத்தில் 3 நாட்கள் இந்த விமான சேவை நடைபெறும்.
ஆலந்தூர்,

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமான சேவை நடந்தது. ஆனால் இலங்கையில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்ததால் இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது.


அங்கு போர் ஓய்ந்து அமைதி திரும்பியதால் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவையை தொடங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் உள்நாட்டு போரினால் பலாலி விமானநிலையம் சேதம் அடைந்ததால் மீண்டும் விமானசேவை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. 41 ஆண்டுகளாக யாழப்பாணம்-சென்னை இடையே விமானசேவை தடைப்பட்டு இருந்தது.

தற்போது யாழ்ப்பாணம் பன்னாட்டு விமான நிலையம் சீரமைக்கப்பட்டு விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 17-ந் தேதி சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு சோதனை அடிப்படையில் ஏர்இந்தியாவின் அலையன்ஸ் விமான சேவை சென்றது.

12 பேருடன் சென்றது

இதையடுத்து சென்னை- யாழ்ப்பாணம் இடையே நேற்று முதல் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது. வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய 3 நாட்கள் இந்த விமான சேவை நடைபெறும்.

சென்னையில் இருந்து நேற்று காலை 10.35 மணிக்கு 12 பயணிகளுடன் முதல் விமானம் யாழ்ப்பாணம் புறப்பட்டு சென்றது. நண்பகல் 12 மணிக்கு அந்த விமானம், யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சென்றடைந்தது.

பின்னர் மதியம் 12.45 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து 35 பயணிகளுடன் மீண்டும் அந்த விமானம் சென்னை புறப்பட்டு, பிற்பகல் 2.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. முதல் விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான கட்டணம் ரூ.3,990 என்றும், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு வர விமான கட்டணம் ரூ.3,190 எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 33 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் அழைத்து சென்ற ஆம் ஆத்மி எம்.பி.
டெல்லியில் இருந்து பீகாருக்கு 33 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஆம் ஆத்மி எம்.பி.யான சஞ்சய் சிங், விமானத்தில் அழைத்து சென்றார்.
2. டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த மத்திய மந்திரி சதானந்தகவுடா நேராக வீட்டிற்கு சென்றதால் சர்ச்சை
டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த மத்திய மந்திரி சதானந்தகவுடா நேராக வீட்டிற்கு சென்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.
3. துருக்கியில் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடிய விமானம் இரண்டாக உடைந்தது
துருக்கியில் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடிய விமானம் இரண்டாக உடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
4. ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது
ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது என்று தகவல் வெளியாகி உள்ளது.