மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை, நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் பெள்ளாதிகுளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பேரூர்,
கோவையை அடுத்த சிறுவாணி நீர்ப்பிடிப்பு மற்றும்மேற்கு தொடர்ச்சிமலையடிவார கிராமங்களில்கடந்த சிலநாட்களாகஅவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாகநொய்யல்ஆற்றில் நேற்றுஅதிகாலை திடீர்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்துநொய்யல்ஆற்றின் முதல் தடுப்பணையானசித்திரைச்சாவடிமீண்டும் நிரம்பி வழிந்தது.இதனைதொடர்ந்துகோவையின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடியகுளங்களுக்கும்தண்ணீர் திருப்பிவிடப்பட்டு உள்ளது.
பேரூர்நொய்யல்படித்துறையில் புதிய பாலம் கட்டும்பணிகளுக்காக பழையபாலம்இடிக்கப்பட்டதால்தற்காலிக தரைப்பாலம்அமைக்கப்பட்டு இருந்தது.இந்த தற்காலிக பாலம்ஏற்கனவேமழைநீரில்அடித்துசெல்லப்பட்டுவிட்டதால், மேலும்மண்அரிப்புஏற்பட்டு குண்டும்குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாகவாகன போக்குவரத்துதடைப்பட்டு உள்ளது.
பருவமழைஎதிரொலி காரணமாக கோவை குற்றாலத்தில்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 18-ந்தேதி முதல்அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.இந்தநிலையில்நேற்று முன்தினம் சிறுவாணிநீர்ப்பிடிப்பு பகுதிமேற்கு தொடர்ச்சிமலைஅடிவாரப்பகுதிகளில்பெய்த திடீர் மழையால்கோவை குற்றாலஅருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கோவை மாவட்டம்காரமடைஅருகே சுமார் 100ஏக்கர் பரப்பளவும், 20 அடி ஆழமும் கொண்டபெள்ளாதிகுளம் உள்ளது.இந்த குளம்காரமடைகிழக்கு பகுதியில்உள்ள பல்லாயிரக்கணக்கான பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களுக்கு முக்கியநீராதாரமாகவிளங்கி வருகிறது.
கட்டாஞ்சிமலை,பெட்டதாபுரம்,பெரியநாயக்கன்பாளையம்,பாலமலைவனத்தில்உருவாகும்ஏழெருமைப்பள்ளம்போன்றநீராதங்களைஒருங்கிணைத்துஇந்த குளம்உருவாக்கபட்டது.இந்தநிலையில்கடந்த 15 ஆண்டுகளாக வறண்டு கிடந்த இந்தபெள்ளாதிகுளம் தற்போது பெய்து வரும்வடகிழக்கு பருவமழையால்அதன்முழு கொள்ளளவையும்எட்டியுள்ளது. இதையடுத்து தண்ணீர்உபரியாக தடுப்பணையில்வெளியேறி செல்கிறது.
பருவமழைக்கு முன்பு குளம்தூர்வாரப்பட்டதால்தற்போதுபெள்ளாதிகுளம் நிரம்பியுள்ளது. இதன் மூலம்இந்த குளத்தைசுற்றியுள்ள சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில்உள்ள கிணறுகள்,ஆழ்குழாய் கிணறுகள்மற்றும் விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். இனிமேல் 2 வருடத்திற்கு விவசாயம் செய்ய தண்ணீர்பிரச்சினைஇருக்காதுஎன்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story