மாவட்ட செய்திகள்

கூடுதல் விலைக்கு யூரியா உரம் விற்றால் நடவடிக்கை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை + "||" + Action Minister Kamaraj warns if urea fertilizer is sold at extra cost

கூடுதல் விலைக்கு யூரியா உரம் விற்றால் நடவடிக்கை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை

கூடுதல் விலைக்கு யூரியா உரம் விற்றால் நடவடிக்கை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை
கூடுதல் விலைக்கு யூரியா உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப் படும் என்று அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நன்னிலம்,

முதல்-அமைச்சர் உத்தரவுக்கு இணங்க யூரியா உரம் தேவையான அளவு கையிருப்பு உள்ளது. விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதல் விலைக்கு யூரியா உரம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


ரேஷன் கடை ஊழியர் களின் கோரிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறோம். எனவே அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தவிர்க்கலாம். ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அதற்கு கட்சி நிர்வாகிகளை தயார்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வழிநடத்தி செல்கிறார்கள்

இதனைத்தொடர்ந்து அவரிடம் தலைமை வெற்றிடம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இதனை மக்கள் தான் முடிவு செய்ய முடியும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வலிமையான தலைமையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்.

நடந்து முடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதன் மூலம் மக்கள் தெளிவுபடுத்தி உள்ளார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் வழி நடத்தி செல்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் டென்னிஸ் புயலுக்கு 2 பேர் பலி; கடுமையாக தாக்கும் என எச்சரிக்கை
இங்கிலாந்து நாட்டை டென்னிஸ் புயல் கடுமையாக தாக்கும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
2. குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம் அரியலூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம் விதிக்கப்படும் என அரியலூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. உலக நடப்பை தெரிந்து கொள்ள பாடத்தை மட்டும் படிக்காமல் ‘தினத்தந்தி’யையும் படிக்க வேண்டும் அமைச்சர் அறிவுரை
உலக நடப்பை தெரிந்து கொள்ள பாடத்தை மட்டும் படிக்காமல் ‘தினத்தந்தி’யையும் படிக்க வேண்டும் என்று விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவுரை வழங்கினார்.
4. ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
5. தர்மபுரி மாவட்டத்தில் 10 ஆயிரம் முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்படும் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு
தர்மபுரி மாவட்டத்தில் 10 ஆயிரம் முதியோருக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.