திருவையாறு அருகே விஷம் தின்ற மாணவி சாவு கல்லூரி கட்டணத்தை தொலைத்ததால் மனமுடைந்தார்


திருவையாறு அருகே விஷம் தின்ற மாணவி சாவு கல்லூரி கட்டணத்தை தொலைத்ததால் மனமுடைந்தார்
x
தினத்தந்தி 13 Nov 2019 4:45 AM IST (Updated: 13 Nov 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு அருகே கல்லூரி கட்டணத்தை தொலைத்ததால் மன முடைந்த மாணவி விஷம் தின்று உயிரிழந்தார்.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கடுவெளி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது55). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ஷாமிலி(22). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த வாரம் கல்லூரி கட்டணம் செலுத்த ஷாமிலி தனது தாய் புஷ்பாவிடம் இருந்து ரூ.15 ஆயிரம் வாங்கி சென்றார். இந்த பணத்தை ஷாமிலி தொலைத்து விட்டார்.

உயிரிழந்தார்

இதனால் மனமுடைந்த அவர் கடந்த 5-ந் தேதி வீட்டிலிருந்த எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாமிலி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புஷ்பா கொடுத்த புகாரின்பேரில் மருவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story