மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில் டூரிஸ்ட், மேக்சிகேப் வாகனங்களை நிறுத்த மாற்று இடம் வழங்க கோரி கலெக்டரிடம் மனு + "||" + Petitioner to collector seeking alternative parking for Tourist and MaxiCab vehicles in Krishnagiri

கிருஷ்ணகிரியில் டூரிஸ்ட், மேக்சிகேப் வாகனங்களை நிறுத்த மாற்று இடம் வழங்க கோரி கலெக்டரிடம் மனு

கிருஷ்ணகிரியில் டூரிஸ்ட், மேக்சிகேப் வாகனங்களை நிறுத்த மாற்று இடம் வழங்க கோரி கலெக்டரிடம் மனு
கிருஷ்கிரியில் டூரிஸ்ட், மேக்சிகேப் வாகனங்களை நிறுத்த மாற்று இடம் வழங்க கோரி ஓட்டுனர்கள் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை டூரிஸ்ட் மேக்சிகேப் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில் சங்க தலைவர் முருகேசன், செயலாளர் ரமேஷ்குமார், பொருளாளர் ஹரிபாலாஜி, துணைத்தலைவர் ஜெயசீலன், துணை செயலாளர் டேவிட்ஆரோக்கியராஜ் மற்றும் செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டர் பிரபாகரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-


கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய கலெக்டர், தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை ஆகியோரது அனுமதியுடன் நாங்கள் எங்களது டூரிஸ்ட் மேக்சிகேப் வாகனங்களை நிறுத்தி தொழில் செய்து வருகிறோம். இந்த நிலையில் எங்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தின் அருகில் ஒரு தனியார் கட்டிடம் ஒன்றை கட்டி முடித்துள்ளனர். அவர்கள் கடந்த 3 மாதங்களாக எங்களை காலி செய்யுமாறு மிரட்டி வருகின்றனர்.

மிரட்டல்

இது சம்பந்தமாக கடந்த மாதம் 16-ந் தேதி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தோம். மாவட்ட கலெக்டரிடமும் இது குறித்து முறையிட்டோம். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அந்த கட்டிடத்தின் உரிமையாளர்கள் எங்களை காலி செய்யுமாறு ஆட்களை வைத்து மிரட்டி வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

எனவே, தொழிலாளர் நலன் கருதி எங்கள் வாகனங்கள் நிறுத்தும் மேற்படி இடத்திற்கு பதிலாக மேம்பாலத்தின் அடியில் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 'குயின்' இணைய தொடருக்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் புதிய மனு
'குயின்' இணையதள தொடர் நாளை முதல் ஒளிபரப்பாக உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் தடை விதிக்க கோரி ஜோசப் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
2. கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் கலெக்டரிடம் மனு
கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று ஆதிதிராவிடர் மக்களின் வாழ்வாதார கூட்டு இயக்கத்தினர் நாகை கலெக்டரிடம் மனு அளித்தனர்.
3. இலவங்கார்குடி ஊராட்சியில் வார்டு மறுவரையறைக்கு பின்பு தேர்தல் நடத்த வேண்டும் கிராமமக்கள் மனு
இலவங்கார்குடி ஊராட்சியில் வார்டு மறுவரை யறைக்கு பின்பு தேர்தல் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் மனு அளித்தனர்.
4. கழிவுநீர் வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு
கழிவுநீர் வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
5. பாலக்கோடு பேரூராட்சியில் வார்டு மறுவரையறையை சீராய்வு செய்ய வேண்டும் முஸ்லிம்கள் மனு
பாலக்கோடு பேரூராட்சியில் வார்டு மறுவரையறையை சீராய்வு செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் முஸ்லிம்கள் கோரிக்கை மனு அளித்தனர்.