புதிய பஸ் நிலையம் எதிரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை மூட வேண்டும் பெண்கள், கலெக்டரிடம் மனு


புதிய பஸ் நிலையம் எதிரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை மூட வேண்டும் பெண்கள், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 12 Nov 2019 10:30 PM GMT (Updated: 12 Nov 2019 8:06 PM GMT)

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் எதிரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை மூட வேண்டும் என்று பெண்கள், கலெக்டர் பிரபாகரிடம் மனு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி,

எங்கள் பகுதியில் 120-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் அன்றாடம் கூலி, விவசாய கூலி செய்து வாழ்ந்து வருகிறோம். மேலும் எங்கள் பெண் குழந்தைகள் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு அதிக அளவில் சென்று வருகின்றனர். அதே போல் இப்பகுதியை சேர்ந்த பெண்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

மூட வேண்டும்

இந்த நிலையில் தற்போது புதிய பஸ் நிலையம் எதிரில் புதிதாக மதுக்கடை திறந்துள்ளனர். இதனால் மது குடிப்பவர்கள் குடித்துவிட்டு, எங்கள் பகுதியை சேர்ந்தவர்களிடம் சண்டை போடுகின்றனர். பெண்கள் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கல்லூரிக்கும், பள்ளிகளுக்கும் செல்லும் பெண் குழந்தைகள் பயந்தவாறு சென்று வருகின்றனர். இதனால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளோம்.

எனவே, எங்கள் பகுதி பொதுமக்கள், பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி மதுக்கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story