மாவட்ட செய்திகள்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Nutrition Staff Demonstrates Emphasis on 9 Requirements

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் நேற்று 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாமக்கல்,

சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சத்துணவு மையங்களை மூடுவதையும், இணைப்பதையும் கைவிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் உழவர் சந்தை அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் தங்கராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நடேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத், செயலாளர் முருகேசன், சங்கத்தின் மாவட்ட துணை தலைவர்கள் சின்னபையன், ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உணவு மானியத்தொகை

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குடும்ப ஓய்வூதியமாக அகவிலைபடியுடன் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். உணவு மானியத் தொகையை குழந்தை ஒன்றுக்கு ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தகுதி உள்ள சத்துணவு பணியாளர்களுக்கு அரசு துறையில் உள்ள காலியிடங்களில் பாகுபாடின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ஒருமாத ஊதியத்தை போனசாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் உழவர்சந்தை அருகே தொடங்கி எம்.ஜி.ஆர். நுழைவு வாயில் அருகே முடிவடைந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை- தென்காசி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. திட்டக்குடி அருகே பெருமுளை ஏரியில் மதகை உடைத்தவர்களை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திட்டக்குடி அருகே பெருமுளை ஏரியில் மதகை உடைத்தவர்களை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. தர்மபுரி, கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. கொரோனா பணியில் இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கொரோனா பணியில் இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.