58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி, குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு


58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி, குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 12 Nov 2019 10:45 PM GMT (Updated: 12 Nov 2019 9:51 PM GMT)

58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி உசிலம்பட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், 58 கிராம கால்வாய் திட்டத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட பொதுப்பணித்துறையினர் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதுகுறித்து கேட்டால் அவர்கள் கூறும் காரணங்கள் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை, எனவே 58 கிராம கால்வாயில் முறையாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். அதற்கு நிரந்தர அரசாணை பெற்றுத்தரவேண்டும்.

அதுவரை நாங்கள் பல்வேறு போராட்டங்களை தொடங்க உள்ளோம் என்ற கோரிக்கைகளை தெரிவித்து 58 கிராம கால்வாய் பாசன விசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், கூட்ட அரங்கிற்குள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த விவசாயிகள் உசிலம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story