மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; தச்சுத்தொழிலாளி பலி + "||" + Motorcycle-truck collision; Carpenter killed

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; தச்சுத்தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; தச்சுத்தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் தச்சுத்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் மணிமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் ( வயது 45). தச்சுத்தொழிலாளி. இவர் ஓரகடம் பகுதியில் இருந்து நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் வேலை சம்பந்தமாக தேவரியம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.


அப்போது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

சாவு

லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொளத்தூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தாய் கொரோனாவால் பலி
கொளத்தூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தாய், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
2. தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் பலி
தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் பலியானான்.
3. தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட புதுக்கோட்டை சிறுவன் பலி
தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த 13 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
4. அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரக்கோணம் மூதாட்டி உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி
அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரக்கோணம் மூதாட்டி உள்பட 2 பேர் நேற்று கொரோனாவுக்கு பலியானார்கள்.
5. மதுரையில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் பலி 218 பேருக்கு புதிதாக தொற்று
மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சையில் இருந்த மேலும் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். இதேபோல் நேற்று ஒரே நாளில் 218 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.