வானவில் : கிஸ்மோர் ஆடியோ ஸ்பீக்கர்கள்
ஸ்மார்ட் உபகரணங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் இந்திய நிறுவனமான கிஸ்மோர், புதிய வகையிலான ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.
வீடுகளிலும், திறந்த வெளியில் நிகழும் விருந்து உள்ளிட்டவற்றிலும் இனிய இசையைக் கேட்டு மகிழ பயன்படுத்தும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. வீல்ஸ், டால் பாய், கிஸ்பார், சரவுண்ட், ஸ்குவாட், டிரையோ என்ற பெயர்களில் இவை வந்துள்ளன. இதில் வீல்ஸ் மாடல் ஸ்பீக்கர் விலை ரூ.19,999 ஆகும். டி6000 மாடலின் விலை ரூ.13,999. மற்றொரு மாடலான டி 2500யின் விலை ரூ.8,499. டி1500 மாடலின் விலை ரூ.4,999 மற்றும் டி 1000 மாடலின் விலை ரூ.2,999 ஆகும்.
இதில் டி.ஜே. டிராலி உள்ளது. இது வெளியிடங்களுக்கு ஸ்பீக்கர்களை எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும். இத்துடன் ஆர்.ஜி.பி. லைட் இருப்பதால் இசையுடன் வெளிச்சமும் பரவி இனிய மாலைப் பொழுதை மேலும் மகிழ்ச்சியானதாக்கும். ஸ்பீக்கர் மட்டுமின்றி மைக்கும் உள்ளது. இந்த ஸ்பீக்கர்கள் அனைத்தும் எல்.இ.டி. டிஸ்பிளேயுடன் வந்துள்ளது. இந்த விளக்கொளியை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தலாம்.
டால் பாய் மாடலில் டி.டி8000 மற்றும் எஸ்.டி6000 மாடல்கள் வருகின்றன. இந்த இரண்டு மாடலுமே ஒன்று அல்லது இரண்டு ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளன. இதில் டிஜிட்டல் எல்.இ.டி. டிஸ்பிளே உள்ளது. டியூயல் மைக் வசதியோடு ரிமோட் கண்ட்ரோல் வசதியும் கொண்டது.
இதில் கிஸ்பார் சீரிஸ் மாடலில் சப்-ஊஃபர் மற்றும் எல்.இ.டி. இன்டிகேட்டர் உள்ளது. புளூடூத், ஏ.யு.எக்ஸ்., யு.எஸ்.பி. இணைப்பு வசதிகளைக் கொண்டது. சரவுண்ட் சீரிஸில் இரண்டு மாடல்கள் வந்துள்ளன. இதில் 5.1 மல்டி மீடியா ஸ்பீக்கர்கள் எல்.இ.டி. டிஸ்பிளேயுடன் வந்துள்ளது. இதில் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் எப்.எம். ரேடியோ வசதியும் உள்ளது.
இதேபோல ஸ்குவாட் சீரிஸ் மாடல்களில் 4.1 மல்டி மீடியா ஸ்பீக்கர்கள் உள்ளன. இதில் டிஜிட்டல் எல்.இ.டி. டிஸ்பிளே உள்ளது. யு.எஸ்.பி., எஸ்.டி. கார்டு வசதி, புளூடூத் இணைப்பு வசதி மற்றும் ரிமோட் கண்ட்ரோல் வசதி கொண்டது. இதிலும் எப்.எம். ரேடியோ வசதி உள்ளது.
டிரையோ சீரிஸ் மாடலில் 2.1 மல்டி மீடியா ஸ்பீக்கர்கள் உள்ளன. இதிலும் டிஜிட்டல் டிஸ்பிளே, யு.எஸ்.பி., எஸ்.டி. கார்டு வசதி, புளூடூத் இணைப்பு வசதிகள் உள்ளன. ரிமோட் கண்ட்ரோல் மற்றும் எப்.எம். ரேடியோ வசதியும் உள்ளது.
Related Tags :
Next Story