வானவில் : சிறுவர்களுக்கான அல்காடெல் டேப்லெட்


வானவில் : சிறுவர்களுக்கான அல்காடெல் டேப்லெட்
x
தினத்தந்தி 13 Nov 2019 3:27 PM IST (Updated: 13 Nov 2019 3:27 PM IST)
t-max-icont-min-icon

சிறுவர்களுக்கான டேப்லெட்டை டி.சி.எல். நிறுவனம் அல்காடெல் பிராண்ட் வாயிலாக அறிமுகம் செய்துள்ளது.

இது ‘ஜாய் டேப் கிட்ஸ்’ என்ற பெயரில் சந்தைக்கு வந்துள்ளது. ஏற்கனவே சிறுவர்களுக்காக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ கிட்ஸ் எடிஷன் மற்றும் அமேசான் பயர் ஹெச்டி 10 கிட்ஸ் எடிஷன் ஆகியவற்றுக்குப் போட்டியாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜாய் டேப்லெட் குழந்தைகளைக் கவரும் வகையில் வெளிப்புறத் தோற்றமே அழகிய வண்ணத்தில் வந்துள்ளது. இது 8 அங்குல அளவிலானது.

இதில் மீடியாடெக் எம்.டி.8765ஏ 1.5 கிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் உள்ளது. 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவக வசதியுடன் வந்துள்ளது. இதில் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. இது நீண்ட நேரம் செயல்பட வசதியாக 4080 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. சிறுவர்கள் எளிதில் கையாள வசதியாக இதன் பின்பகுதியில் வளையம் உள்ளது.

இது டேப்லெட் கீழே விழுவதைத் தவிர்க்க உதவுகிறது. இதில் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளது.

இது சிறுவர்களுக்கான புத்தகம், வீடியோ காட்சிகள் மற்றும் வீடியோ கேம்களை பெற உதவுகிறது. மேலும் குழந்தைகள் நீண்ட நேரம் டேப்லெட் உபயோகிப்பதைத் தவிர்க்கும் நோக்கில் பெற்றோர்கள் இதைப் பயன்படுத்தும் நேரத்தை வரையறுக்கும் வசதியும் உள்ளது. அல்காடெல் ஜாய் டேப் கிட்ஸ் என்ற பெயரில் வந்துள்ள இந்த டேப்லெட் விலை சுமார் ரூ.12 ஆயிரமாகும்.

Next Story