வானவில் : உலகின் விலை உயர்ந்த சொகுசு லிமோசின் கார்கள்


வானவில் : உலகின் விலை உயர்ந்த சொகுசு லிமோசின் கார்கள்
x
தினத்தந்தி 13 Nov 2019 11:40 AM GMT (Updated: 13 Nov 2019 11:40 AM GMT)

ஆடம்பரம், சொகுசு என்றாலே லிமோசின் கார்கள்தான் உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இது பெரும்பாலும் ஆடம்பரத்தை பறைசாற்றுவதற்கான காரே தவிர, அத்தியாவசியத் தேவைக்கான காராக இருப்பதில்லை. பெரும்பாலும் இவை நாடுகளின் அதிபர்கள், மன்னர்கள் பயன்படுத்தும் காராகத்தான் உள்ளது.

சொகுசு, பாதுகாப்பு தன்மைக்கேற்ப தயாரிக்கப்படும் லிமோசின் கார்களில் உலகிலேயே அதிக விலை உயர்ந்த, பல்வேறு சவுகரியங்கள் கொண்ட கார்களை பற்றிய கண்ணோட்டம்:

அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் கெடிலாக் லிமோசின்

அமெரிக்க அதிபர் மட்டுமே பயன்படுத்தும் கார் இது. பாதுகாப்பான ஆடம்பரமான காராகும். முன்னர் அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்திய பீஸ்ட் எனப்படும் மாடலுக்குப் பதிலாக இப்போது இந்தக் கார்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் பாதுகாப்பான, அதிநவீன கருவிகளை உள்ளடக்கியது. இதில் உள்ள வசதிகள் பாதுகாப்பு கருதி வெளியிடப்படுவதில்லை. இது 5 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்டது. இதன் சக்கரங்கள் காற்று இறங்கினாலும் ஓடும் தன்மை கொண்டது. இதன் எடை 9 டன். இதன் உத்தேச விலை 15 லட்சம் டாலர் ஆகும். சுமார் ரூ. 10 கோடிக்கு மேல்.

அமெரிக்கன் ட்ரீம்

1980-ம் ஆண்டுகளின் பிற்பாதியில் கார் பிரியர் ஜே ஓஹர்பெர்க் என்பவர் மிகவும் நீளமான இந்தக் காரை உருவாக்கினார். இதன் நீளம் 100 அடியாகும். இதில் உள்ள வசதிகள் கற்பனை செய்து பார்க்க முடியாதவை. 1970-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கெடிலாக் எல்டோராடோ மாடலைப் போன்றது. இதில் மொத்தம் 26 சக்கரங்கள் உள்ளன. நீச்சல் குளம் மட்டுமின்றி, இதில் ஹெலிகாப்டர் இறங்கு தளமும் உள்ளது. இதன் விலை 40 லட்சம் டாலராகும். இது நீண்ட காலமாக பயன்படுத்தப்படவில்லை. இதனால் இது தற்போது புதுப்பிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ளது.

மிட்நைட் ரைடர்

இந்நிறுவனம் தயாரித்த உறுதியான, எடை அதிகம் கொண்ட லிமோசின் காராகத்தான் இருக்கும். இது 416 அடி நீளம் கொண்டது. பன்முக தங்கும் வசதி கொண்டது. 3 லவுஞ்சுகள் உள்ளன. இது 435 குதிரைத் திறன் கொண்டது. இதன் விலை 25 லட்சம் டாலராகும்.

மேபாஷ் 62 லாண்டவுலெட்

2009-ம் ஆண்டு லிமோசின் நிறுவனம் உருவாக்கிய கான்செப்ட் மாடல். 1920-ம் ஆண்டு இந்நிறுவனம் உருவாக்கிய லாண்டவுலெட் மாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. டிரைவருக்கும், பின்னிருக்கை பயணிக்கும் தொடர்பு முற்றிலுமாக இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டது. பயணிகள் மேற்கூரை திறந்து மூடும் வகையிலானது. இதன் பயணிகள் இருக்கை மிகவும் சொகுசான தன்மை கொண்டது. இதில் 612 குதிரைத் திறன் கொண்ட வி12 என்ஜின் உள்ளது. இது சுமார் 3 டன் எடை கொண்டது. இருந்தாலும் 5 விநாடி நேரத்தில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடுமாம். இதன் விலை 13 லட்சம் டாலராகும்.

பாடோமொபைல் லிமோசின்

திரைப்படத்தில் இடம்பெற்ற மிகவும் பிரபலமான லிமோசின் கார்களில் இதுவும் ஒன்றாகும். 1989-ம் ஆண்டுகளில் வெளியான பேட்மேன் திரைப்படங்களில் இந்த கார் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு பேட்மேன் ரசிகர் ஒருவர் அதிக விலை கொடுத்து இந்தக் காரை வாங்கியுள்ளார். இதில் வி 8 ஜெட் என்ஜின் உள்ளது. இதன் மூலம் ஏவுகணை ஏவும் வசதி, பின்பகுதியில் பேட்மேனின் இறக்கையுடன் உள்ளது. இதில் மிகவும் சவுகரியமான, ஆடம்பரமான உலகின் விலை உயர்ந்த லிமோசின் கார்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் விலை 42 லட்சம் டாலராகும்.

மெர்சிடஸ் மேபாஷ் எஸ்.600 புல்மேன் கார்டு

வெடிகுண்டு தாக்குதலையும் சமாளிக்கும் திறன் கொண்டது. இதில் டர்போ வி12 என்ஜின் உள்ளதால் 523 குதிரைத் திறன் சக்தியை வெளிப்படுத்தக் கூடியது. 100 கி.மீ. வேகத்தை 6.5 விநாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டது. இதன் விலை 15 லட்சம் டாலராகும்.

பாடோமொபைல் லிமோசின்

திரைப்படத்தில் இடம்பெற்ற மிகவும் பிரபலமான லிமோசின் கார்களில் இதுவும் ஒன்றாகும். 1989-ம் ஆண்டுகளில் வெளியான பேட்மேன் திரைப்படங்களில் இந்த கார் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு பேட்மேன் ரசிகர் ஒருவர் அதிக விலை கொடுத்து இந்தக் காரை வாங்கியுள்ளார். இதில் வி 8 ஜெட் என்ஜின் உள்ளது. இதன் மூலம் ஏவுகணை ஏவும் வசதி, பின்பகுதியில் பேட்மேனின் இறக்கையுடன் உள்ளது. இதில் மிகவும் சவுகரியமான, ஆடம்பரமான உலகின் விலை உயர்ந்த லிமோசின் கார்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் விலை 42 லட்சம் டாலராகும்.

ரோல்ஸ் ராய்ஸ் பான்டம் லிமோசின்

ஆடம்பர, சொகுசு கார்களில் ரோல்ஸ் ராய்ஸ் நிச்சயம் இடம்பெறாமல் போகாது. மிக முக்கிய பிரமுகர் களுக்காகவே இந்நிறுவனம் தயாரித்தது. 21 அடி நீளம் கொண்ட இதில் 6.8 லிட்டர் என்ஜின் உள்ளது. இது 563 குதிரைத் திறன் சக்தியை வெளிப்படுத்தக்கூடியது. வி 12 என்ஜின் 8 கியர்களுடன் வந்துள்ளது.

புருணே சுல்தானின் ரோல்ஸ் ராய்ஸ்

ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் போனவர் புருணே சுல்தான் என்பதும் அனைவரும் அறிந்ததே. கார்களின் மீது ஆர்வம் கொண்டவர். இவரது அரண்மனையில் 7 ஆயிரம் கார்கள் உள்ளன. இவரிடம் உள்ள இந்த லிமோசின் கார்தான் மிகவும் விலை உயர்ந்த காராக கருதப்படுகிறது. இந்தக் காரின்மேல் பகுதி தங்கத் தகடுகளால் ஆனது. தங்கத்தின் விலையே 14 லட்சம் டாலராகும்.

போயிங் 727 லிமோ

ஜெட் விமான தோற்றத்தில் உருவாக்கப்பட்ட லிமோசின் கார். இது சாலைகளில் ஓட்டுவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் எடை 11 டன் ஆகும். பெரிய திரை, டி.வி., சவுகரியமான இருக்கைகள், மேற்கூரையில் கண்ணாடி உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன. இதில் 50 பேர் பயணிக்க முடியும்.

மெர்சிடஸ் ஜி 63 ஆர்மர்டு லிமோசின்

மிகுந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட குண்டு துளைக்காத காராகும். இதன் ஜன்னல் கண்ணாடியும் குண்டு துளைக்காத வகையில் உருவாக்கப்பட்டது. இதில் பயணிகள் சொகுசான பயணம் செய்ய, சாய்ந்தபடி தூங்கும் வகையிலான இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 5.5 லிட்டர் என்ஜின் உள்ள இது 563 குதிரைத் திறனை வெளிப்படுத்தக் கூடியது.

Next Story