அரசு பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது.
நாமக்கல்,
நாமக்கல்லில் உள்ள திருச்சி சாலையில் மாருதி நகர் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. கோல்டன் அபெக்ஸ் கிளப் மற்றும் நடுநிலைப்பள்ளி சார்பில் நடந்த இந்த விழாவுக்கு நாமக்கல் வட்டார கல்வி அலுவலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியர் வீர சிவாஜி வரவேற்றார். நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொண்டு நிறுவனத்தின் தலைவர் பெருவழுதி மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மோகனூர் அருகே உள்ள பேட்டப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதி தலைமை தாங்கினார். விழாவில் நேருவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, இனிப்பு வழங்கப்பட்டது.
பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர். பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பள்ளி உதவி ஆசிரியர் புவனேஸ்வரி, மேலாண்மை குழு தலைவர் கோமதி, மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியை சுமதி வரவேற்றார். இதில் சிலம்பம், நடனம், தற்காப்பு கலை, பாராம்பரிய விளையாட்டுகள், ஆங்கில பேச்சுப்பயிற்சி மற்றும் மாறுவேடப் போட்டிகள் நடந்தது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தண்ணீர்பந்தல்பாளையம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பங்கஜவல்லி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரவி, கிராம கல்விக்குழு தலைவர் மாணிக்கம், பாண்டியனார் தொழிற்சங்க தலைவர் தனபால், தலைமை ஆசிரியை சுமதி, நிர்மலா ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். சிலம்ப விளையாட்டில் பள்ளி மாணவி ரஞ்சனி சிறப்பாக விளையாடி பார்வையாளர்களை கவர்ந்தார். பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
Related Tags :
Next Story